ஃபரூக் அசாம் (Farooq Azam) என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க கடல் நுண்ணுயிர் ஆய்வாளராவார். இவர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பாகிசுதானில் லாகூர் மாகாணத்தில் பிறந்தவர். உலகின் பல ஆய்வுக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் இவருடையதும் ஒன்று [1]. இவர் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்திலுள்ள சிகிரிப்சு கடலாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மதிப்புமிக்கப் பேராசிரியர் ஆவார் [2].