Food and Nutrition Bulletin | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Food Nutr. Bull. |
துறை | பொது உடல்நலவியல் மற்றும் ஊட்டச்சத்து |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | டாக்டர் நோவல் சொலோமன்ஸ் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | சாக் பப்ளிகேசன்ஸ் |
வரலாறு | 1978-தற்போதுவரை |
வெளியீட்டு இடைவெளி: | காலாண்டு |
தாக்க காரணி | 1.648 (2016) |
குறியிடல் | |
ISSN | 0379-5721 (அச்சு) 1552-6127 (இணையம்) |
LCCN | TX341 |
CODEN | FNBPDV |
OCLC | 5348644 |
இணைப்புகள் | |
ஃபுட் அண்ட் நியூட்ரிசியன் புல்லட்டின் (Food and Nutrition Bulletin) என்பது ஆங்கிலத்தில் வெளிவரும் ஒரு காலாண்டு ஆய்விதழ் ஆகும். இது 1978 ஆம் ஆண்டில் டாக்டர் நெவின் எஸ். ஸ்கிரிம்ஷா என்பவரால் நிறுவப்பட்டு, சாக் பப்ளிகேசனால் வெளியிடுகிறது. அந்தப் ஆய்விதழானது கொள்கை பகுப்பாய்வு, அசல் அறிவியல், சமூக ஆய்வு, வளரும் நாடுகளில் மனித ஊட்டக்குறை மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கல்வி மதிப்பீடுகள் போன்றவை குறித்து ஆய்வுகளை வெளியிடுகிறது. இது டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஃபிரட்மேன் பள்ளியில் ஊட்டச்சத்து அறிவியல் மற்றும் கொள்கை அமைந்துள்ள, நெவின் எஸ். ஸ்கிரிம்ஷா சர்வதேச ஊட்டச்சத்து அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகும்.
இந்த இதழானது ஃபினான்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற பிரிவில் உள்ள 128 பத்திரிகைகளில் 57 வது இடத்தைப் பெற்றுள்ளது.[1] மேலும் "ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை" என்ற பிரிவில் 81 பத்திரிக்கைகளில் 61 வது இடத்திலும் உள்ளது.[2]