நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Ophiuchus |
வல எழுச்சிக் கோணம் | 16h 59m 01.680s[1] |
நடுவரை விலக்கம் | -15° 15′ 28.73″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 26.2 − 27.5[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M2V[3] |
சுற்றுப்பாதை | |
Period (P) | 2.414 ± 0.005 h[2] |
வேறு பெயர்கள் | |
GRB 100925A, SWIFT J1659.2-1515[1] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அஎபக ஜே11659-152 (MAXI J1659-152) என்பது வேகமாகச் சுழலும் கருந்துளை/ விண்மீன் அமைப்பாகும். இது 2010 செபுதம்பர் 25, அன்று நாசாவின் சுவிப்ட்டு விண்வெளித் தொலைநோக்கி வழி கண்டுபிடிக்கப்பட்டது. 2013, மார்ச் 19, அன்று, ஈசாவின் எக்சுஎம்மெம் நியூட்டன் விண்வெளித் தொலைநோக்கி 2.4 மணி வட்டணை அலைவுநேரத்தில் சுற்றிவரும் ஒரு விண்மீனையும் கருந்துளையையும் அடையாளம் காண உதவியது.
கருந்துளையும் விண்மீனும் அவற்றின் பொதுவான பொருண்மை மையத்தை சுற்றி வருகின்றன. விண்மீன் இலேசான பொருளாக இருப்பதால், அது இந்தப் புள்ளியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. "மணிக்கு இரண்டு மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் அதன் பெரிய வட்டணையைச் சுற்றிவருகிறது ". நொடிக்கு 500 முதல் 600 கிமீ வரை அல்லது புவியின் வட்டணை வேகத்தை விட சுமார் 20 மடங்கு வேகத்தில். 47 துக் X9 அமைப்பு கண்டுபிடிக்கப்படும் வரை எக்சுக்கதிர் இரும அமைப்பில், இதுவரை காணப்படாத மிக வேகமாக நகரும் விண்மீனாக, இந்த விண்மீன் இருந்தது. [4] மறுபுறம், கருந்துளை 'மட்டும் மணிக்கு 150000 கிமீ வேகத்தில் சுற்றுகிறது
இந்த கச்சிதமான இணைப்பில் உள்ள கருந்துளை சூரியனை விட குறைந்தது மூன்று மடங்கு பெரியது, அதே நேரத்தில் அதன் செங்குறுமீன் சூரியனை விட 20% மட்டுமே பொருண்மை கொண்டுள்ளது. இந்த இணை தோராயமாக ஒரு மில்லியன் கிலோமீட்டர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. ஒப்பிடுகையில் புவியிலிருந்து சூரியனுக்கான தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். [5]