அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) இஸ்லாமியச் சட்ட முறைமைகளின் படி இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும். இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டம்(சரியா) 1937ன் படி இஸ்லாமியச் சட்ட முறைகள் இந்தியாவில் அமலுக்கு வந்தது அதனை ஒழுங்குபடுத்தி பாதுகாக்க 1973ம் ஆண்டு இவ்வாரியம் உருவாக்கப்பட்டது.[1][2]. இந்திய இஸ்லாமியர்களின் முக்கிய தலைமை அமைப்பாகவும் நிலவுகிறது.
இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை(சரியா சட்டம்) தேவையான வரைவுகள் மூலம் பாதுகாத்து நடைமுறைப்படுத்தல்
இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறுக்கிடும் அரசு அதிகாரத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் நீக்கி இஸ்லாமிய விகக்குகளைப் பெற்றுத்தருதல்
இஸ்லாமியச் சட்டத்தின் சமூக மற்றும் தனிநபர் வரைமுறைகள் பற்றி விழிப்புணர் ஏற்படுத்தல்; மற்றும் நூல் பதிப்புகளின் மூலம் பரப்புதல்
இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை ஊக்குவித்து நடைமுறைப்படுத்த திட்டங்கள் வகுத்தல்
செயல்பாட்டுக் குழுக்களை உருவாக்கி இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை காலத்திற்கு காலம் பாதுகாத்து நாடுமுழுவது அமல்படுத்தல்
உல்மா மற்றும் சட்ட வல்லுநர்கள் மூலம் நிலையான குழுவை உருவாக்கி, மாநிலரசு, மத்தியரசு மற்றும் அரசுசார் அமைப்புகளின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட மசோதாக்கள் மூலம் இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தை ஆய்வு செய்தல்
இஸ்லாமியச் சட்ட முறைகொண்ட பள்ளிகளில் அமைதி, சகோதரத்துவம், நல்லெண்ணம், கூட்டுறவு மற்றும் ஒற்றுமை வளர்த்து, இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை பாதுகாத்தல்
இஸ்லாமிய நீதிப் பரிபாலன அமைப்புகளின் மூலம் தற்போது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முகமத்தியர்கள் சட்டம் பற்றி ஆய்வு செய்து நிறை குறைகளை அலசி தீர்வு காணுதல்
ஆய்வு குழுக்கள், கருத்தரங்குகள், கருத்துக்கோவை, பொது சொற்பொழிவுகள், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகள் மற்றும் இலக்கிய வெளியீடுகள் மூலம் வெகுஜன ஊடகத்தை பயன்படுத்தி மேற்கொண்ட கொள்கைகளைப் பரப்புதல்