அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (All India United Democratic Front அல்லது AIUDF ) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் நிறுவனத் தலைவர் பத்ருத்தீன் அஜ்மல் ஆவார். இக்கட்சியின் தலைமையிடம் குவகாத்தியில் அமைந்துள்ளது.[1]

மெளலானா பத்ருத்தீன் அஜ்மல், அக்டோபர் 2, 2005ல் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்னும் கட்சியை துவக்கினார். பின்னர், பிப்ரவரி 2009ஆம் ஆண்டு இக்கட்சியை மற்ற மாநிலங்களிலும் துவங்கப்போவதாக அறிவித்தார். இந்தியப் பொதுத் தேர்தல், 2009க்குப் பிறகு அக்கட்சியின் பெயர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என மாற்றப்பட்டது.[2]

2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில், இக்கட்சி 13 இடங்களை வென்றது.[3] இக்கட்சியின் சின்னம் பூட்டு மற்றும் சாவி ஆகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தலைமையிடம்". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அசாம் சட்டமன்றத் தேர்தல், 2016 - முடிவுகள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "கட்சி மற்றும் அதன் சின்னங்கள் தேதி: 18.01.2013" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2020.