தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | 1994 |
அங்கூர் தாமா (Ankur Dhama) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். இணை-தடகள வீரரான் இவர் நீண்ட தூர ஓட்டப்பந்தயப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடுகிறார். இவருக்கு 2018 ஆம் ஆண்டு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.
அங்கூர் தாமாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது, ஓலி வண்ணங்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. [1] பின்னர், இவர் தில்லிக்குச் சென்றார். அங்கு பார்வையற்றோருக்கான இயேபிஎம் மூத்த மேல்நிலைப் பள்ளியில் படித்தார். செயின்ட் இசுடீபன் கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கச் சென்றார். [2]
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது காயமடைந்தார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். [3]