அசன் அல்-ராம்மா (Hasan al-Rammah) அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் பொறியியளர் ஆவார்[1]. எகிப்தின் மம்லுக் சுல்தானக ஆட்சிக் காலத்தில் வெடி மருந்து பொருள்கள் மற்றும் வெடிக்கும் தூள்கள் போன்றவை குறித்து இவர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். தொட்டால் வெடிக்கும் வெடிக்கண்ணி உட்பட போரின் முன்மாதிரி கருவிகள் சிலவற்றை இவர் வடிவமைத்தார்[2][3]. அல்-ரம்மா தனது ஆரம்ப வெடிக்கண்ணியை தானே நகர்ந்து எரியும் ஒரு முட்டை என்று அழைத்தார். இரண்டு உலோகத் தகடுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு நாப்தா, உலோக நிரப்பிகள் மற்றும் சால்ட்பீட்டர் உப்பு ஆகியவற்றை நிரப்பி இவ்வெடிகண்ணி நிரப்பப்பட்டிருக்கும். வெடிக்கண்ணி நீரின் மேற்பரப்பு முழுவதும் நகரும் நோக்கம் கொண்டதாகும். பெரிய ராக்கெட் ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டு ஒரு சிறிய சுக்கான் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது[3][4].
அல்-ராம்மா பல புதிய வகை துப்பாக்கி வெடிபொருள்களை உருவாக்கினார்[5]. மேலும் ஒரு புதிய வகை மின்காப்பு உருகி மற்றும் இரண்டு வகையான தீமூட்டிகளையும் கண்டறிந்தார்[4]. 1295 ஆம் ஆண்டு இவர் காலமானார்.