அசியா எல் அன்னௌனி (Assia El Hannouni) (பிறப்பு: மே 30, 1981 [1] [2] [3] இவர் ஓர் பிரான்சு தடகள வீரராவார். இவர் 800 மீட்டர் பாராலிம்பிக் விரைவோட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். இவருக்கு பார்வைக் குறைபாடு [4] உள்ளது. இடது கண் குறைவாகவும், வலது கண் முற்றிலும் தெரியாமலும் இருக்கிறார். இவர் 800 மீ விரைவோட்டப் போட்டிகளில், குறைபாடுகள் இல்லாத விளையாட்டு வீரர்களுக்கு எதிராக ஓடுகிறார். [5] [6]
2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைகால பாராலிம்பிக்கில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 800 மீ. விரைவோட்டப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். [6] [7] ஒவ்வொரு நிகழ்விலும் உலக சாதனையை முறியடிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த கோடைகால பாராலிம்பிக்கில் இவர் மீண்டும் பிரான்சைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் விளையாட்டுகளின் தொடக்க விழாவில் நாட்டின் கொடியை ஏந்திச் சென்றார். [8] [9] இவர் 800 மீ விரைவோட்டத்தில் (டி 13/12) 2'4.96 மணி நேரத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். [10] [11] 1500 மீ. பிரிவில் வெள்ளி வெல்லும் முன் 200 மீ., 400 மீ. விரைவோட்டத்தில் தங்கம் வென்றார். [12]
2007 ஆம் ஆண்டில், இவர் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பெண்கள் 800 மீட்டர் விரைவோட்டத்தில் ஒரு புதிய உலக சாதனை படைத்தார். ( 2'6.76 நேரம்). [5] அதே ஆண்டு, பிரெஞ்சு தேசிய உள்ளரங்கப் போட்டிகளில் 800 மீட்டரில் ஊனமுற்றோர் அல்லாத விளையாட்டு வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். [13]
2007 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் தேசிய விளையாட்டு மற்றும் உடற்கல்வி நிறுவனத்தில் ஊடகவியல் படித்து வருகிறார். [5]