பத்மசிறீ அஜிதா சிறீவசுதவா | |
---|---|
அஜிதா சிறீவசுதவா 2022-ல் | |
பிறப்பு | வாரணாசி, உத்தரப்பிரதேசம் |
அறியப்படுவது | கஜாரி நாட்டுப்புற பாடல்கள் |
விருதுகள் | பத்மசிறீ (2022) உத்தரப்பிரதேச சங்கீத நாடக அகதமி விருது (2017) |
அஜிதா சிறீவசுதவா (Ajita Srivastava) என்பவர் இந்தியப் பாடகி, கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பிரபலமான நாட்டுப்புற இசை வடிவமான கஜாரி நாட்டுப்புறப் பாடல்களைப் பிரபலப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நன்கு அறியப்படுகிறார்.[1] கலைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் 2022-ல் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2]
சிறீவசுதவா, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தார். இவர் பிரயாக்ராஜில் உள்ள பிரயாக் சங்கீத் சமிதியில் தனது சங்கீத் பிரபாகரை முடித்துள்ளார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் பட்டத்தினையும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார்.[3]
பின்னர், சிறீவசுதவா மிர்சாபூரைச் சேர்ந்த பிரபல கவிஞரும், எழுத்தாளரும், வழக்கறிஞருமான ராஸ்பிஹாரி லாலை மணந்து மிர்சாபூரில் குடியேறினார். இவரது ஒரே குழந்தையான அனுராக் ஆனந்த் இந்திய வான்படையில் பணியாற்றுகிறார்.[4]
சிறீவசுதவா தனது பாடகர் தொழில் வாழ்க்கையை 1980-ல் அனைத்திந்திய வானொலி வாரணாசியில் தொடங்கினார். இவர் அனைத்திந்திய வானொலி, இலக்னோ தூர்தர்ஷன், சங்கீத நாடக அகாதமி உத்தரப்பிரதேசம், கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுமம், வெளியுறவுத் துறை அமைச்சகம், வடக்கு மத்திய கலாச்சார மையம், பிரயாக்ராஜ், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தில்லி அரசு, இந்தியத் தரைப்படை மற்றும் டி-சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உள்ளிட்டவை. [3]
2017-ல், அவர் 40 வருட ஆசிரியர் பணிக்குப் பிறகு ஆர்ய கன்யா இடைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி ஓய்வு பெற்றார்.[5] அப்போதிலிருந்து, கஜாரி மற்றும் பிற நாட்டுப்புற இசையைத் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் பிரச்சாரம் செய்யவும் தனது நேரத்தை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.[6]