அடாலஜ் படிக்கிணறு | |
---|---|
அழகிய வேலைபாடுகள் கொண்ட அடாலஜ் படிக்கிணறு | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | இந்து கட்டிடக் கலை |
நகரம் | காந்திநகர் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 23°10′01″N 72°34′49″E / 23.16691°N 72.58024°E |
கட்டுமான ஆரம்பம் | 1499 |
நிறைவுற்றது | 15ம் நூற்றாண்டு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | ஐந்து தளங்கள் கொண்ட ஆழமான கிணறு |
அடாலஜ் படிக்கிணறு (Adalaj Stepwell) (குசராத்தி: અડાલજની વાવ, இந்தி: अडालज बावड़ी, இந்தி: अडालज बावली, மராத்தி: अडालज बारव), குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்திலிருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் காந்திநகரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள அடாலஜ் கிராமத்தில் உள்ளது. இக்கிணற்றின் தூண்கள், பக்கவாட்டுச் சுவர்கள் மற்றும் படிகளில் இலைகள், பறவைகள், மீன்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
அடாலஜ் படிக்கிணற்றை வகேலா வம்ச மன்னரான வீர் சிங் வகேலாவின் நினைவாக அவரது மனைவி ருத்தாபாய் 1499ல் கட்டினார். இந்தப் படிக்கிணறு இந்து - இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்படும் இப்படிக்கிணற்றின் கரையில் இந்துக்களின் திருவிழாக்களுக்களும், புனிதச் சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.[1][2][3][4] வணிகப் பாதையில் அமைந்த இப்படிகிணற்றின் அருகில் வணிகர்களின் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் பணியாட்கள் தங்கி நீரைப் பருகி ஓய்வெடுத்துச் செல்வர்.
சோலாங்கி கட்டிடக் கலையில், ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான இப்படிக்கிணறு எண்கோண வடிவில், மணற்கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு தளமும், அழகிய சிற்பங்களால் செதுக்கப்பட்ட தூண்கள் கொண்டது. இப்படிகிணற்றில், மழைக் காலங்களில் நீரை சேமித்து, நீர் பற்றாக்குறை காலங்களில் இக்கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்துவர்.