அட்டோக் கோட்டை | |
---|---|
பகுதி: பாக்கித்தான் வரலாறு | |
அட்டோக், பஞ்சாப் பகுதி | |
ஆள்கூறுகள் | 33°53′32″N 72°14′02″E / 33.892087°N 72.233988°E |
இடத் தகவல் | |
இணையத்தளம் | www.attockonians.com |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1583 |
சண்டைகள்/போர்கள் | அட்டோக் போர் |
அட்டோக் கோட்டை (Attock Fort) என்பது சிந்து ஆற்றைக் கடந்து செல்லும் தனது படைகளை பாதுகாப்பதற்காக பேரரசர் அக்பரிடம் அமைச்சராகவும் கட்டுமான கண்காணிப்பாளராகவும் இருந்த கவாஜா சம்சுதீன் கவாபி என்பவரின் மேற்பார்வையில் அக்பரின் ஆட்சியின் போது அட்டோக் குர்தில் 1581 முதல் 1583 வரை கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். [1] அட்டோக் 1758 ஏப்ரல் 28 அன்று மராட்டிய பேரரசால் கைப்பற்றப்பட்டு சிலகாலம் வடக்கு எல்லையாக இருந்தது. அகமது ஷா துரானி அட்டோக்கை மீண்டும் கைப்பற்றி, மூன்றாம் பானிபட் போருக்குப் பிறகு வடக்கில் மராட்டிய முன்னேற்றத்தை நிரந்தரமாக நிறுத்தினார். அட்டோக் போரின் போது ஆப்கான்-சீக்கியப் போர்களில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
முகலாயப் பேரரசர் அக்பரின் உத்தரவின் பேரில் 1581 இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் ஆப்கான் படையெடுப்பாளர்களுக்கு எதிராக கோட்டை ஒரு முக்கிய பாதுகாப்புக் கோடாக பயன்படுத்தப்பட்டது. இந்த கோட்டை 1812 இல் சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டது. இறுதியில் ஆங்கிலேயர்கள் கோட்டையை கைப்பற்றினர். [2] 1947 இல் இந்தியப் பிரிப்புக்குப் பிறகு பாக்கித்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கோட்டை வந்தது. [3] பின்னர், இது பாக்கித்தான் இராணுவத்தின் 7 வது பிரிவின் தலைமையகமாக மாறியது. 1956 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டை பாக்கித்தான் இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் படையான சிறப்பு சேவைகள் குழுவிடம் (எஸ்.எஸ்.ஜி) ஒப்படைக்கப்பட்டது. இன்று கோட்டை அதன் கட்டுப்பாட்டில் உள்ளது.
இது ஒருபுறம் பெசாவர் சாலைக்கும் மறுபுறம் சிந்து ஆறுக்கும் இடையில் அமைந்துள்ளது. [4] இது தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் நகரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு இராணுவத் தளமாக இருப்பதால், கோட்டைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. [1] அட்டோக்
இந்தக் கோட்டை 4 வாயில்களையும் அதன் சுவர்கள் 1600 மீ நீளத்தையும் கொண்டுள்ளது. இந்த வாயில்களுக்கு தில்லி வாயில், இலஹோரி வாயில், காபூலி வாயில் மற்றும் மோரி வாயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. [3]