ஒரு அணிச்சலை 15 (5 ஆவது அணிச்சல் எண்) துண்டுகளாக வெட்டுவதன் இயங்குபடம் . 4 தளங்களால் வெட்டப்படுகிறது. இவற்றுள், 14 துண்டுகள் அணிச்சலின் வெளிப்பரப்பைக் கொண்ட துண்டுகளாகவும், ஒரு துண்டு முழுவதும் அணிச்சலின் நடுப்பகுதியைக் கொண்ட ஒரு நான்முகி வடிவத்திலும் அமைகின்றன.
கணிதத்தில்அணிச்சல் எண் அல்லது கேக் எண் (cake number) என்பது, ஒரு முப்பரிமாண கனசதுரத்தைச் சரியாக nதளங்களைக்கொண்டு பிரிக்கக்கூடிய பகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையைக் குறிக்கும் எண்ணாகும். இவ்வெண், Cn எனக் குறிக்கப்படுகிறது. பிரிக்கப்படும் ஒவ்வொரு பகுதியும், கனசதுர வடிவ அணிச்சல் ஒன்றை கத்தியால் வெட்டக் கிடைக்கும் துண்டுகளை ஒத்தமையும் என்பதால் இந்த எண் அணிச்சல் எண் என அழைக்கப்படுகிறது. அணிச்சல். சோம்பேறி உணவுவழங்குவோனின் தொடர்வரிசைக்கு ஒத்த முப்பரிமாண எண்ணாக அணிச்சல் எண் அமைகிறது.