அண்ணா நினைவிடம் | |
---|---|
![]() மெரினா கடற்கரையில் உள்ள நினைவிட வளாகத்தின் முகப்பு | |
![]() | |
மாற்றுப் பெயர்கள் | அண்ணா நினைவகம் அண்ணா சதுக்கம் |
பொதுவான தகவல்கள் | |
வகை | கல்லறை மற்றும் அருங்காட்சியகம் |
முகவரி | காமராஜர் சாலை, மெரினா கடற்கரை |
நகரம் | சென்னை |
நாடு | இந்தியா |
அடிக்கல் நாட்டுதல் | 5 பிப்ரவரி 1969 |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
அண்ணா சதுக்கம் (Anna Memorial) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். அதிகாரப்பூர்வமாக பேரறிஞர் அண்ணா நினைவிடம் என்று அழைக்கப்படுகிறது. அண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரீனா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அண்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு கருப்பு பளிங்கு மேடை எழுப்பப்பட்டது. நினைவிடத்தைச் சுற்றியுள்ள இரண்டு அரை வட்ட வீடு வடிவ மேடைக்கு செல்லும் ஒரு நடைபாதையில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. கல்லறையின் ஒரு முனையில் ஓர் அணையா விளக்கும் அதன் மேல் ஒரு கோள வடிவ குவிமாட விளக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையின் வடக்கு முனையில், காமராசர் நடைபாதையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் செயலலிதா நினைவிடத்தை ஒட்டி இச்சதுக்கம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8ஆம் தேதியன்று அண்ணா நினைவு வளாகம், தமிழ்நாட்டின் மற்றொரு முன்னாள் முதலமைச்சர் எம். கருணாநிதியின் நினைவிடத்தையும் உள்ளடக்கிய வகையில் விரிவுபடுத்தப்பட்டது.[1][2]
1996–1998ஆம் ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், நினைவுச்சின்னம் ₹ 27.5 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டது.[3] மேலும் நுழைவு வளைவில் திமுக கட்சியின் சின்னமான 'உதய சூரியனின்' வடிவமைப்பும் பொறிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மே 2001ஆம் ஆண்டு மே மாதத்தில் எதிர்க்கட்சியான அதிமுக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வடிவமைப்பு அகற்றப்பட்டது.[4][3]
2012ஆம் ஆண்டில், நினைவுச்சின்னம் ₹ 12 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில், அவரது சீடர் எம். கருணாநிதி இறந்தபோது, தனது வழிகாட்டியின் பின்னால் அடக்கம் செய்யப்பட்டார். கருணாநிதிக்கு ₹ 390 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு புதிய நினைவுச்சின்னம் கட்ட திட்டமிடப்பட்டது.[3]
அண்ணா நினைவுச்சின்னத்தின் வடக்குப் பகுதியில் அண்ணாதுரை பற்றிய அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.