நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Pegasus |
வல எழுச்சிக் கோணம் | 22h 52m 09.8636s[1] |
நடுவரை விலக்கம் | +35° 26′ 49.608″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.17[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F[3] |
தோற்றப் பருமன் (B) | 10.77 ± 0.04[2] |
தோற்றப் பருமன் (V) | 10.36 ± 0.03[2] |
தோற்றப் பருமன் (J) | 9.214 ± 0.022[2] |
தோற்றப் பருமன் (H) | 9.004 ± 0.018[2] |
தோற்றப் பருமன் (K) | 8.953 ± 0.013[2] |
மாறுபடும் விண்மீன் | planetary transit[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −22.2±0.3[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 74.676(19) மிஆசெ/ஆண்டு Dec.: 14.944(20) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.6606 ± 0.0208[1] மிஆசெ |
தூரம் | 700 ± 3 ஒஆ (214.6 ± 1.0 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.27±0.03[4] M☉ |
ஆரம் | 1.491+0.016 −0.014[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.1956+0.0095 −0.013[4] |
வெப்பநிலை | 6410±140[4] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 12.6 ± 1.0[5] கிமீ/செ |
அகவை | 3.4 ± 1 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
அததொ-பி-8 (HAT-P-8)என்பது பெகாசசில் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு தோற்றப் பொலிவுப் பருமை 10 கொண்ட விண்மீனாகும் . இது சூரியனை விட 28% அதிக பொருண்மை கொண்ட F-வகை விண்மீன். அததொ-பி-8 விண்மீனைச் சுற்றி இரண்டு செங்குறுமீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாவது M5V கதிர்நிரல் வகையும் 0.22 M☉ பொருண்மையும் கொண்டது . இரண்டாவது, 0.18 M☉ பொருண்மை கொண்டது. இதன் கதிர்நிரல் வகை M6V ஆகும்.
2008 ஆம் ஆண்டில் , அததோ வலைப்பிணையத் திட்டம் இந்த விண்மீனைச் சுற்றி அததொ-பி-8பி என்ற சூரிய புறக் கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. இந்தக் கோள் ஒரு சூடான வியாழனை ஒத்த வளிமப் பெருங்கோளாகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.354±0.035 MJ | 0.04496+0.00046 −0.00045 |
3.0763458±0.0000024 | <0.0060 |