அதீப் (பாக்கித்தானிய நடிகர்)

முசாபர் அதீப் அல்லது சுருக்கமாக அதீப் (ஆங்கிலம் :'Adeeb) (1934 – 26 மே 2006) இவர் ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 1940 முதல் 1962 வரை 38 இந்திய படங்களில் தோன்றியுள்ளார், இருப்பினும் அவர் 1950 கள் வரை இவர் அவ்வளவாக படங்களில் நடிக்கத் தொடங்கவில்லை. 1962 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவின் பம்பாயிலிருந்து (இப்போது மும்பை) பாக்கித்தானின் லாகூருக்கு மாறினார். மேலும் அவர் இறக்கும் வரை தனது திரைப்பட வாழ்க்கையில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

அவர் பம்பாயில் காஷ்மீரைச் சேர்ந்த பழமைவாத பஷ்தூன் (பதான்) குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பம் 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பம்பாய்க்கு குடிபெயர்ந்தது, அங்கு மகாராட்டிராவிலுள்ள பம்பாய் பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முதுகலை பட்டம் முடித்த பின்னர், அவர் நடிக்கத் தொடங்கினார். அவரது சமகாலத்தவர்களைப் போலல்லாமல், திரைக்கதை என்பது அதீப்பின் முதல் விருப்பமாக இருந்தது. ராஜ் கபூரின் தந்தை பிருத்வி ராஜ் கபூருடன் பிருத்வி திரையரங்கிலும், பின்னர் இந்தியன் நேஷனல் தியேட்டர் என்ற நாடக அமைப்பில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்தியாவில் இந்த நேரத்தில்தான் அவர் நடிப்பின் அடிப்படைகளை அறிந்து கொண்டார், இது பின்னர் 2 தலைமுறை பார்வையாளர்களை மகிழ்விக்க உதவியது.[1]

அவர் தனது ஆரம்ப வாழ்க்கையில் சிறிய வேடங்களில் பணியாற்றிய போதிலும், ஜியா சர்காதியின் இயக்கத்தில் திலீப் குமார், மீனா குமாரி மற்றும் அன்வர் உசேன் ( நர்கிசின் சகோதரர்) ஆகியோருக்கு எதிராக நடித்த "புட்பாத்" (1953) என்ற திரைப்படம் அவருக்கு முதல் திருப்புமுனைப் படமாக அமைந்தது. இயக்குநர் அக்பர் அலி அக்கு மற்றும் நடிகர் / இயக்குநர் இக்பால் யூசுப், அதீப்பின் நெருங்கிய நண்பரின் மகனும், இயக்குனருமான எஸ்.எம். யூசுப் போன்றோரின் வற்புறுத்தலின் பேரில், 1962 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் குடிபெயர்ந்தார். அதற்கு முன்பு, இந்தியாவில் "மெஹந்தி", "பாக் தமன்" (1956) மற்றும் "ஜங் உட்பட 30 படங்களில் பணியாற்றினார். அவர் கராச்சியில் குடியேறினார், பின்னர் லாகூருக்குச் சென்று 1960 களில் இருந்து தனது கடைசிப் படமும் சையத் நூரின் பெரிய வெற்றிப்படமுமான "மஜஜன்" (2006) வரை பாத்திரங்களைத் தேடித்தேடி நடித்து வந்துள்ளார்.

பாக்கித்தானிய திரைப்படங்களில் வில்லனாக இருக்கும் அஸ்லம் பெர்வைஸ், மசூத் அக்தர் மற்றும் முகமது அலி போன்ற அழகிய வில்லன்களால் ஆளப்பட்டு வந்த சகாப்தத்தில், அதீப் "தால் மெய்ன் காலா " என்ற திரைப்படத்தின் (1964) மூலம் நுழைந்தார். இத்திரைப்படத்தை இக்பால் யூசுப் இயக்கியுள்ளார். மேலும் மறைந்த நடிகர்கள் நிராலா மற்றும் முகமது அலி ஆகியோருடன் சையத் கமல் மற்றும் பஹார் பேகம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

அவரது கடைசி ஆண்டுகளில், அவர் திரைப்படங்களை விட மேடையில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் சர் சையத் அகமது கானின் கடைசி தொலைக்காட்சி நாடகங்களில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு திரைவாழ்க்கையில், அதீப் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், ஏமாற்றும் சகோதரர், கொடூரமான தந்தை, மோசமான கணவர், நேர்மையற்ற நண்பர் மற்றும் மிருகத்தனமான நில உரிமையாளர் போன்ற வெவ்வேறு வடிவங்களில் வில்லத்தனமான பாத்திரங்களை சித்தரிக்கிறார்.

இறப்பு

[தொகு]

அதீப் 2006 மார்ச் 26, அன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள பஞ்சாப் இருதயவியல் நிறுவனத்தில் இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]