அந்தரத்தாமரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | N. hydrophylla
|
இருசொற் பெயரீடு | |
Nymphoides hydrophylla (Lour.) Kuntze, 1891 | |
வேறு பெயர்கள் [சான்று தேவை] | |
|
அந்தரத்தாமரை (Nymphoides hydrophylla, பொதுவாக crested floating-heart என அழைக்கப்படுகிறது[1]) என்பது மென்யாந்தேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நீர்வாழ் தாவரமாகும். இது வெப்பமண்டல ஆசியாவைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவுருவானவையாக நீரில் மிதந்தபடி இருக்கும். மலர்கள் சிறியவை; வெண்மை நிறமுள்ளவை; நீண்ட காம்புள்ளவை; கொத்தாக இருக்கும். இலைக்கு ஒரு அங்குலம் கீழே கிளையில் பூங்கொத்து இருக்கும். வேர் ஆழமாகப் பதியாதது. இதன் மெலிந்த தண்டுகள் உண்ணத்தக்கவை. இவை தைவானில் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிக்காக தைவானில் பெரும்பாலும் மீனோங் மாவட்டத்தில், காஹ்சியுங்கில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அந்தரத் தாமரையின் மலர்கள் பெண் ஈரில்லமுள்ளவை ஆகும்.[2] இதன் தட்டையான விதைகளானது உலர்ந்து வெடிக்கும் விதையுறைக்குள் இருக்கின்றன.
இத்தாவரங்கள் பொதுவாக அலங்காரத்திற்காக நீர்த் தடாகங்களில் வளர்ப்பதற்காக விற்கப்படுகின்றன. இவற்றின் பூர்வீக எல்லைக்கு வெளியே, பரவி, குறிப்பாக புளோரிடாவில் தொல்லை தரும் களைச் செடிகளாக மாறியுள்ளன. இவை உறைபனியால் பாதிக்கப்படுவதில்லை. மேலும் இவை தென் கரொலைனாவில் உள்ள மரியன் ஏரியில் காணப்படுவதும் பதிவாகியுள்ளது.[3]