.
அந்தராளம் (சமசுகிருதம்:अन्तराल), என்பது, வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கோயில்களின் கருவறைக்கும் மற்றும் மகா மண்டபத்திற்கும் இடையே அமைந்த முன்கூடம் அல்லது முற்றம் ஆகும்.
பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் அமைந்த கஜுராஹோவின் கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் இலக்குமணன் கோயில்களிலும், தென்னிந்தியாவின் சாளுக்கியர் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்ட கோயில்களில் விமானமத்திற்கும் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அந்தராளம் முறையில் முற்றவெளி அமைத்து கட்டப்பட்டுள்ளது. [1]