அனுபா ( Anupa) அதாவது, நீர்நிலை) என்பது ஒரு பண்டைய இந்தியப் பகுதி ஆகும். இது இன்றைய மத்தியப் பிரதேசத்தில் உள்ள பண்டைய மகிழ்மதி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் ஒத்திருக்கிறது. வாயு புராணம் விந்தியபிரிஷ்டத்தில் (விந்திய பீடபூமி) அமைந்துள்ள 'அனுபாவின் ஜனபதத்தை ( இராச்சியம் ) குறிப்பிடுகிறது. கௌதமிபாலாஸ்ரீயின் நாசிக் குகைக் கல்வெட்டு, அவரது மகன் கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆதிக்கத்தில் அனுபாவும் இருந்ததாகக் கூறுகிறது. [1] முதலாம் உருத்ரதாமனின் ஜுனாகர் பாறைக் கல்வெட்டு, அனுபாவை அவனது இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடுகிறது. [2]
இப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பல செப்புத் தகடு மானியங்கள் ( ஷிர்பூர், பாக் மற்றும் தார் மாவட்டத்தில் உள்ள மனவர்) 'மகாராஜா' என்ற பட்டத்தைத் தாங்கிய குடும்பத்தால் வழங்கப்பட்டுள்ளன. 'பரமபட்டாரகன்' (பெரும்பாலும் ஏகாதிபத்திய குப்தர்கள் ) என்ற பட்டத்தை தாங்கிய சில பேரரசர்களின் மேலாதிக்கத்தை இவர்கள் அங்கீகரித்தனர். இந்த குடும்பத்தின் ஆட்சியாளர்களின் பெயர்கள் புலுண்டா, சுவாமிதாசர் மற்றும் உருத்ரதாசர் என இருக்கிறது. இந்த மூன்று ஆட்சியாளர்களும் தங்கள் தலைநகரான வால்காவிலிருந்து ஆட்சி செய்தனர். ஆனாலும் இப்பகுதி இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் அனைத்து செப்பு-தகடு மானியங்களும் குறிப்பிடப்படாத சகாப்தத்தில் தேதியிட்டவை. [3]
பர்வானி மற்றும் பாக் குகைகளிலிருந்து கிடைத்த இரண்டு செப்புப் பட்டைகள் மகிழ்மதியின் தலைநகரான சுபந்து என்பவரால் வழங்கப்பட்டுள்ளன. பத்வானி செப்புத்தகடு 167 ஆம் ஆண்டு குறிப்பிடப்படாத சகாப்தத்தில் தேதியிடப்பட்டது.