அனுமக்கொண்டா | |
---|---|
அண்மைப்பகுதி, வாரங்கலின் மூன்று நகரங்களில் ஒன்று | |
ஆள்கூறுகள்: 18°01′00″N 79°38′00″E / 18.0167°N 79.6333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | வாரங்கல் நகரம் |
நகரம் | வாரங்கல் |
நிர்மாணிக்கப்பட்டது | 1199 |
தோற்றுவித்தவர் | காக்கத்தியர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகர வாரங்கல் நகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 506 002 |
தொலைபேசி குறியீட்டு எண் | +91–870 |
வாகனப் பதிவு | டிஎஸ் 03 |
அனுமக்கொண்டா (Hanamkonda) அல்லது அனுமகொண்டா என்றும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள அனுமக்கொண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது வாரங்கல் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப் பகுதியாகும். [1] இதை பெருநகர வாரங்கல் மாநகராட்சி நிர்வகிக்கிறது. [2]
பல நூற்றாண்டுகளாகத் தெலங்காணா மாநிலத்தை ஆண்ட காக்கத்திய வமசத்தின் மன்னர்கள் தங்கள் அடையாளங்களாக, புகழ்பெற்ற வாரங்கல் கோட்டை, ஆயிரம் தூண் கோயில் போன்றவைகளை விட்டுச் சென்றுள்ளனர். காக்கத்திய அரசர்களின் அசல் தலைநகரம் வாரங்கல் அல்ல என்பது தெரியவருகிறது. உண்மையில் அவர்கள் அறியப்படாத காரணங்களுக்காக தலைநகரை வாரங்கலுக்கு மாற்றினர். ஒரு மன்னன் தனது இராச்சியத்தை வாரங்கல் மலைக் கோட்டையிலிருந்து இயக்குவது மூலோபாய ரீதியாக சிறந்ததாக இருக்கலாம்.
வாரங்கல் வடக்குப் பகுதியிலிருந்து குறுகிய தொலைவிலிருந்த புறநகராக இது இருக்கிறது. கணபதி தேவனின் ஆட்சிக் காலத்தில் புதிய தலைநகரை வாரங்கலுக்கு மாற்றுவதற்கு முன்பு காக்கத்திய மன்னர்களின் பழைய தலைநகராக அனம்கொண்டா இருந்தது. அதைச் சுற்றியுள்ள மாவட்டம் கல்யாணி பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சப்பி சயிரா அல்லது சப்பி ஆயிரம் என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம் அன்மகொண்ட விசயா என்றும் குறிப்பிடப்பட்டது. இருப்பினும், உண்மையான சமசுகிருத பெயர் அனுமனாதாச்சலா அல்லது அனுமனின் மலை (அனுமன்) என்பதாகும்.
14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, நகரம் துக்ளக் வம்சத்தின் கீழ் தொடர்ச்சியான போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கி.பி 1323 இல் முகம்மது பின் துக்ளக் இதைச் சுல்தான்பூர் என்று பெயர் மாற்றினார். இறுதியாக பாமினி சுல்தானகத்தின் எழுச்சியாலும், தலைநகரங்களை ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டாவுக்கு மாற்றியதன் மூலம் நகரம் தனது பெருமையை இழந்தது. [3]
இதன் சிறப்பு கி.பி 1163இல் உருத்ரா மன்னனால் கட்டப்பட்ட ஆயிரம் தூண் ஆலயம் ஆகும். கணபதி தேவனின் காலத்தில் வாரங்கலைப் புதிய நகரமாக மாற்றினார்.
12 ஆம் நூற்றாண்டில் காக்கத்திய மன்னர்களால் கட்டப்பட்டு பிரதான தெய்வமாக பத்மாக்சி (லட்சுமி) தெய்வத்திற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காக்கத்திய வம்சத்தின் காலத்தில் ஆயிரம் தூண் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. சிவன், விஷ்ணு, சூர்யதேவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் திரிகூடாலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பத்ரகாளிக்கென ஒரு கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
தன்னாட்சி கல்வி நிறுவனமான காகத்திய பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழுவால் ஏற்கப்பட்டுள்ளது. [4]