அனு சௌத்ரி

அனு சௌத்ரி
ஏகலைவா விருது வழங்கும் நிக்ழச்சியில் அனு சௌத்ரி
தாய்மொழியில் பெயர்ଅନୁ ଚୌଧୁରୀ
பிறப்புசௌத்ரி அனுசுயா தாசு
30 ஆகத்து 1979 (1979-08-30) (அகவை 45)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்முனு
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1998– தற்போது வரை

அனு சௌத்ரி (Anu Choudhury) (பிறப்பு 30 ஆகத்து 1979) ஓர் முன்னணி இந்திய நடிகையாவார். இவர் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மா கோஜா பயானி என்ற ஒடியா படம் இவரது முதல் அறிமுகமாகும்."Anu Choudhury – the Star of Orissa". Orissa Times. 11 December 2007 இம் மூலத்தில் இருந்து 5 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090105200234/http://www.orissatimes.net/2007/12/anu-choudhury-star-of-orissa.html. 

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அனு புவனேசுவரத்தில் ஒடியத் திரைப்பட ஆசிரியரான ரபி சௌத்ரி-சௌதாமினி சௌத்ரி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை ரபி சவுத்ரி திரைப்படங்களில் பணியாற்றும் ஒப்பனைக் கலைஞராகவும், படத் தொகுப்பாளரகவும் இருந்தார். எனவே அனு திரைப்பட பின்னணியில் இருந்து ஒரு பெண்ணாக திரையுலகை நன்கு அறிந்திருந்தார். புவனேசுவரத்தில் ரமா தேவி மகளிர் கல்லூரியில் மனையியலில் பட்டம் பெற்றார். ஒடிசா திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு இவர் எப்போதும் ஒரு நடிகையாக இருக்க விரும்பினார். சிறு வயதிலேயே இவர் இரண்டு ஒடிசா திரைப்படங்களில் குழந்தை கலைஞராக நடித்தார். நடிகையாவதற்கு முன்பு இவர் தனது குழந்தை பருவத்தில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்தார். புவனேசுவரில் உள்ள பிஜு பட்நாயக் கல்லூரியில் அறிவியல் பாடத்தில் தனது மேல்நிலைக் கல்வியை முடித்தார்.

தொழில்

[தொகு]

ஒடியா திரைப்படத் துறையில் தொழில்

[தொகு]
"ஹீரோ ஹாக்கி இந்தியா" போட்டித் தொடக்க விழாவில் அனு சௌத்ரி நடமாடினார்.

அனு ஒரு குழந்தைக் கலைஞராக ஒடிசா திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பது நிருபமா , மமதா மகே முலா ஆகிய இரண்டு திரைப்படங்களில் குழந்தைக் கலைஞராக மிகச் சிறிய பாத்திரங்களில் நடித்திருந்தார். ஒரு முன்னணி கதாநாயகியாக நடித்த இவரது வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இவரது முதல் திரைப்படத்தில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை என்றாலும், இவரது முயற்சியால் இவர் அந்த காலத்தில் ரச்சநா பானர்ஜியுடன் ஒடிசா திரைப்படத்துறையில் போட்டியிட தகுதி பெற்றார். இவரது முதல் படத்திற்காக, சலாசித்ரா ஜகத் விருதில் சிறந்த நடிகைக்கான ஒடிசா மாநில திரைப்பட விருதைப் பெற்றார். அப்போதிருந்து, இவர் பிஸ்வபிரகாஷ் உட்பட பல படங்களில் நடித்தார். பிஸ்வபிரகாஷில் இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை நந்திதா தாஸுடன் நடித்திருந்தார். இது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாகும்.

தெற்கு தொழிலில் தொழில்

[தொகு]

அனு சவுத்ரி 2000 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குள்ளான "சுபவேலா" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முதல் நாளில் படத்தின் பிரது கைப்பற்றப்பட்டது என்று ஒரு வதந்தி பரவியது., தெலுங்கு வெளியீட்டிற்கு அசாதாரணமாக ஒரே ஒரு திரையரங்கில் ஏன் வெளியிடப்பட்டது என்று அனைவரும் ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோர் நடித்த ரன்வே பிரைடு என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாகும். ஹாலிவுட் பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வியாபாரம் செய்தது. ஆனால் இந்த டோலிவுட் பதிப்பு சந்தேகத்திற்குரிய தொடக்கத்துடன் இருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும், நல்ல வசூலையும் செய்தது.

முத்யம் [1],மனசு தெலுசுகோ போன்ற படங்களில் அனு சௌத்ரி தொடர்ந்து நடித்தார். ஆனாலும் இவர் தென்னிந்திய திரைப்படத் துறையில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

பெங்காலி திரைப்படங்கள்

[தொகு]

அனு தனது பெங்காலி திரைப்பட வாழ்க்கையை சூர்யா[2] என்ற படத்தில் பிரசென்சித் சாட்டர்ஜியுடன் இணைந்து தொடங்கினார். சுவபன் சாகா இயக்கத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் இவர் வங்காள திரைப்படத் துறையுடன் ஒன்றிணைந்து தொடர்ந்து ராம் லக்ஷ்மன், தாதர் ஆதேஷ் போன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்றார் இவர் பிரசென்சித் சாட்டர்ஜி , ஜிஷு செங்குப்தா ஆகியோருடன் ஒரு அற்புதமான இணையை உருவாக்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Muthyam Review". 2 November 2001. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "Surya". 2 August 2004. Archived from the original on 13 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]