அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம்

பேகம் ராணா லியாகத் அலிகான் (அ.பா.பெ.ச நிறுவனர்)[1]

அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் (All Pakistan Women's Association) என்பது பாக்கித்தானில் பொதுவாக அறியப்படும் ஒரு தன்னார்வ, இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் அல்லாத அமைப்பு ஆகும். பாக்கித்தான் பெண்களின் தார்மீக, சமூக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவது இச்சங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.[2]

1949 ஆம் ஆண்டு பேகம் ரானா லியாகத் அலி கான் என்பவரால் இச்சங்கம் நிறுவப்பட்டது. இவர் பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு செயற்பாட்டாளராவார். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களின் பங்களிப்புகளுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல என்று இவர் தொடர்ந்து முழங்கி வந்தார். தொடக்கத்தில் பிரித்தானிய இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு புதியதாக உருவான சுதந்திர பாக்கித்தானில் அகதிகள் நெருக்கடியை கையாளவே அனைத்துப் பாக்கித்தான் பெண்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.[3] சுபைதா அபீப் ரகீம்தூலா இந்த சங்கத்தின் அர்ப்பணிப்பு உறுப்பினராக இருந்தார்.

சங்கம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து மிகவும் சுறுசுறுப்பான அமைப்பாக இயங்கி வருகிறது. பாக்கித்தான் முழுவதும் 56 மாவட்டங்களிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் கூட இச்சங்கத்திற்கு கிளைகள் உள்ளன. [2] ஆண்டுதோறும் பன்னாட்டு மகளிர் தினம், ஐநா தினம் மற்றும் யுனிசெஃப் தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளை சங்கம் கொண்டாடுகிறது. ஒரு தொண்டு நிறுவனமாகச் செயல்படுவதால் சங்கம் தன் பணிகளுக்காக நன்கொடைகளை நம்பியுள்ளது.

அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் 1974 ஆம் ஆண்டில் யுனெசுகோவின் வயதுவந்தோர் கல்வியறிவுப் பரிசையும் பின்னர் 1987 ஆம் ஆண்டில் அமைதி தூதுவர் சான்றிதழையும் பெற்றது.

கிழக்கு பாக்கித்தான் பிரிவினையால் வங்காள தேசம் உருவானதால் அங்கு டாக்கா நகரில் சங்கத்தின் கிளை வங்கதேச மகிலா சமிதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4]

2016 ஆம் ஆண்டு சங்கம் நிறுவப்பட்ட 68 ஆவது ஆண்டு விழா இலண்டன் நகரில் நடத்தப்பட்டது. பாக்கித்தான் உயர் ஆணையத்தின் வருடாந்திர விருந்து விழாவில் நிறுவனர் பேகம் ரானா லியாகத் அலி கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பேகமின் பார்வை பாக்கித்தானியப் பெண்களை பாக்கித்தான் சமூகத்திற்கு சாதகமாக பங்களிக்க தூண்டியது என்று நிகழ்வில் ஒரு பேச்சாளர் கூறினார்.[3]

குறிக்கோள் மற்றும் நோக்கம்

[தொகு]

அனைத்து பாக்கிதான் மகளிர் சங்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் சுருக்கமாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளன: [1] 1. பாக்கித்தான் நாட்டுப் பெண்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் அறிவார்ந்த பங்கேற்பு.[1] 2. சட்ட, அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் பாக்கித்தான் பெண்கள்நலன் முன்னேற்றம். [1] 3. நாடு முழுவதும் கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கொள்கைகளை ஊக்குவித்தல். [1] 4. வீட்டிலும் சமூகத்திலும் பாக்கித்தான் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. [1] 5. பன்னாட்டுநல்லெண்ணத்தை மேம்படுத்துதல் மற்றும் மனிதகுலத்தின் சகோதரத்துவத்தை ஊக்குவித்தல் [1]

இணைப்பு சங்கங்கள்

[தொகு]

அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் பின்வரும் அமைப்புகளுடன் நல்லுறவு கொண்டு ஆலோசனைகளைப் பெறுகிறது.[1]

1. பாக்கித்தான் அரசு
2. பொருளாதார மற்றும் சமூக மன்றம்

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐநா மற்றும் அதன் சிறப்பு நிறுவனங்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கிறது.[1]
இச்சங்கம் பன்னாட்டு அளவில் பல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
• மகளிர் கழகங்களின் பொது கூட்டமைப்பு
• பெண்களின் சர்வதேச கூட்டணி

தேசிய அளவில் சங்கம் பின்வரும் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
• ரானா கைவினைஞர் காலனி
• குடிசைத் தொழில்கள் அமைப்பு
• குல்-இ-ரானா சமூக மையம்
• குல்-இ-ரானா நுசுரத் தொழில்துறை இல்லம்
• பெண்கள் சர்வதேச கலைக் கழகம்
• மகளிர் கழகங்களின் பொது கூட்டமைப்பு

திட்டங்கள்

[தொகு]

அ.பா.பெ.ச பின்வரும் திட்டங்களையும் செயற்படுத்துகிறது.

  • தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் [2]
  • சுகாதார மையங்களில் ஊட்டச்சத்து நிகழ்ச்சிகள்
  • மாண்டிசோரி/தொடக்கக் கல்வி பள்ளிகள் [2]
  • எழுத்தறிவுக்கான வயது வந்தோர் கல்வி
  • தேவையானவர்களுக்கு சமூக கல்வி மற்றும் சமூகப் பணி[2]
  • மக்கள் தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் [2]
  • சட்ட உதவி
  • திறன் பயிற்சி மற்றும் கைவினைப்பொருள்கள் சில்லறை கடைகள்
  • இளம்பெண்கள் விழிப்புணர்வுத் திட்டங்கள்
  • மருந்தகங்கள்[2]

சாதி, மதம் அல்லது நிறத்தைப் பொருட்படுத்தாமல் பாக்கித்தானியப் பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை இங்கு வழங்கப்படுகிறது. பாக்கித்தான் அல்லாத பெண்களும் வரவேற்கப்படுகிறார்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்.

தாய்மார்கள் கூட்டம்[1]

கிழக்கு மற்றும் மேற்கு பாக்கித்தானின் பிரிவினைக்கு முன்னும் பின்னும் அ.பா.பெ.ச பின்வரும் துறைகளை உள்ளடக்கி செயற்பட்டது:

• சமூக நலன்: இதில் சுகாதார தன்னார்வலர் பயிற்சி, கல்வித் திட்டங்கள், நகர்ப்புற சமூக மேம்பாடுகள், மருத்துவமனைகள் போன்ற பல முயற்சிகள் அடங்கும். சமூக நலத்துறை அமைச்சகத்தை அணுகி அ.பா.பெ.ச முன்முயற்சி எடுத்தது.

• கல்வி: நூற்றுக்கணக்கான தொடக்கப் பள்ளிகள் மற்றும் தாய்மார்கள் மன்றங்கள் தொடங்குதல், கராச்சியில் பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்வி வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் கல்வியறிவு மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை ஊக்குவித்தல், லாகூர் மற்றும் டாக்காவில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் வீட்டு அறிவியல் மற்றும் வீட்டு அறிவியல் துறைகளை அ.பா.பெ.ச உருவாக்கியது.

• கிராமப்புற புனரமைப்பு: அரசாங்க கிராம உதவி திட்டங்களுடன் சேர்ந்து அ.பா.பெ.ச நெருக்கமாக வேலை செய்கிறது மற்றும் பொது கிராமப்புற திட்டங்களை ஊக்குவிக்க சமூக மையங்களை உருவாக்கியுள்ளது.

• பன்னாட்டு விவகாரங்கள்: அனைத்து பன்னாட்டு மாநாடுகள், தூதுக்குழு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வருகை ஆகியவற்றில் பங்கேற்பது.

• பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகள்: கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் தேவையான சட்டமன்ற அல்லது பிற நடவடிக்கைகளை நாடுவதன் மூலம் பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி கல்வி கற்பிக்கும் பொறுப்பு அ.பா.பெ.சங்கத்திற்கு உள்ளது.

நிதி ஆதரவு

[தொகு]

• அ.பா.பெ.ச தன்னுடைய நிதியைப் பின்வரும் வழிகளில் பெறுகிறது:

• உள் நிதி திரட்டும் முயற்சிகள்

• உறுப்பினர் கட்டணம்

• அரசு மானியங்கள்

தலைமையகம்

[தொகு]

அ.பா.பெ. சங்கத்தின் தலைமையகம் பாக்கிதான் நாட்டின் கராச்சி நகரத்தில் அமைந்துள்ளது. சங்கத்தின் ஆளும் குழு ஆண்டுதோறும் கூடி அவர்களின் முக்கிய கொள்கைகளை உருவாக்குகிறது. சங்கத்தின் கிளைகள் லாகூர், பெசாவர், இலண்டன் மற்றும் இலங்கையில் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Elizabeth Long, Series: Series 4 : biographies of Women, ID: File - 365. University of Waterloo.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Profile of All Pakistan Women Association (APWA) on charity-charities.org website, Retrieved 16 August 2017
  3. 3.0 3.1 All Pakistan Women's Association role lauded பரணிடப்பட்டது 29 திசம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம், Pakistan Observer (newspaper), Published 25 October 2016, Retrieved 16 August 2017
  4. Purkayastha, Nibedita Das (2012). "Bangladesh Mahila Samiti". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.

புற இணைப்புகள்

[தொகு]