அன்னு டாண்டன் | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009 - 2014 | |
முன்னையவர் | பிரஜேஷ் பதக் |
பின்னவர் | சாக்சி மகாராஜ் |
தொகுதி | உன்னாவு மக்களவைத் தொகுதி உன்னாவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சந்தீப் டாண்டன் 15 நவம்பர் 1957 உன்னாவு, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | சந்தீப் டாண்டன் 22 டிசம்பர் 1976 |
இளைப்பாறுமிடம் | சந்தீப் டாண்டன் 22 டிசம்பர் 1976 |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி (நவம்பர் 2020 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரஸ் (2020 அக்டோபர் வரை) |
துணைவர்கள் | திருமணம் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | தயானந்தா சுபாஷ் தேசிய முதுகலை கல்லூரி (உன்னாவு), கான்பூர் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல், 1977) |
தொழில் | வணிகம், சமூக சேவகர் |
மூலம்: [1] |
அன்னு டாண்டன் (Annu Tandon, பிறப்பு: நவம்பர் 15, 1957)[1] இவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தின் உன்னாவு மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமாஜ்வாதி கட்சியில் சேர்வதற்காக 2020 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.
இவர், "ஹரிடே நரேன் தவான்" என்ற அறக்கட்டளை ஒன்றின் நிறுவி அதன் இயக்குநராக இருக்கிறார். இது 2000 ஆண்டிற்கு முன்பிருந்தே மாவட்டத்தில் அறச்செயல்கள் புரிவதில் தீவிரமாக செயல்பட்டு வந்தது.[2] இந்த அறக்கட்டளை, பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் வழங்கப்படும் நிதி ஆதரவின் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கல்வி சார்ந்தும் பணியாற்றி வருகிற இந்த அமைப்பானது, படிப்பறிவற்ற பெற்றோரின் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்களுக்கு உதவுவது போன்ற புதுமையான திட்டங்களில் கவனம் செலுத்தி வந்தது.[3]
1957ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள், உன்னாவில் ஹரிடே நரேன் தவான் - கிருபாவதி தவான் ஆகியோருக்குப் பிறந்தார். 1975 ஆம் ஆண்டில் உன்னாவின் ராஜ்கியா பாலிகா இன்டர் கல்லூரியில் தனது இடைநிலைப் படிப்பை மேற்கொண்டார். 1977 ஆம் ஆண்டில் உன்னாவோவின் தயானந்த் சுபாஷ் தேசிய முதுகலை கல்லூரியில் அறிவியல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[4] இவர் டிசம்பர் 22, 1976 அன்று சந்தீப் டாண்டனை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[1] இவரது கணவர் ரிலையன்ஸ் குழுமத்தின் தொடர்பு நிர்வாகியாக இருந்தார். 1994ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, இவர் இந்திய வருவாய்த்துறைப் பணியில் இருந்தார்.[5] அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரியாக, டாண்டன் ரிலையன்ஸ் நடத்திவரும் வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் விசாரணை நடத்தினார். மேலும், டினா அம்பானியின் வீட்டிலும் சோதனை நடத்தினார்.[6]
இவரது முழுக் குடும்பத்திற்கும் முகேசு அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்களது இரண்டு மகன்களும் ரிலையன்ஸின் ஊழியர்களாக உள்ளனர்.[7]
2009ஆம் ஆண்டு தேர்தலின் போது இவர் 41 கோடி (10 மில்லியன் அமெரிக்க டாலர்) சொத்துக்களைக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.[8] 2014 தேர்தல் அறிவிப்புகளில் இவர் 42 கோடி (அமெரிக்க டாலர் 10 மில்லியன்) சொத்துக்களை அறிவித்தார்.[9]
உத்தரப் பிரதேசத்தில், 2009 ஆம் ஆண்டில் நடந்த இந்திய பொதுத் தேர்தலில், அன்னு டாண்டன் ஒரு புதிய அரசியல் வேட்பாளராக காங்கிரஸால் களமிறக்கப்பட்டார். உன்னாவோ இந்தியாவின் மிகப்பெரிய தொகுதியாகும். முந்தைய 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் இங்கு நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த இடத்தை பகுஜன் சமாஜ் கட்சி வென்றது. தேர்தலின் போது, திரைப்பட நட்சத்திரம் சல்மான் கான் உட்பட பல முக்கிய நபர்கள் இவருக்காக பிரச்சாரம் செய்தனர்.[10]
உத்தரபிரதேசத்தில் நடந்த 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், அன்னு டாண்டன் மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய தேர்தல் தொகுதியான உன்னாவிலிருந்து காங்கிரஸால் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதற்கு முந்தைய 2009 பொதுத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வெற்றியைத் தந்த இவர் 2014 தேர்தலில் மோசமாக தோல்வியடைந்திருந்தார். 2014 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகளில் 16% வாக்குகளை மட்டுமே பெற்று இவர் 4 வது இடத்தில் இருந்தார். தேர்தல் தோல்விக்குப் பின்னர், தோல்விக்கு காங்கிரஸ் தலைமையை குறை கூற மறுத்துவிட்டார்.[11]
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.[12] இவர் நவம்பர் 2, 2020 அன்று சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.[13]