அமேசான் ஆற்று இறால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. அமேசோனிகம்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் அமேசோனிகம் கெல்லர், 1861 |
மேக்ரோபிராக்கியம் அமேசோனிகம் (Macrobrachium amazonicum) என்பது அமேசான் ஆற்று இறால் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது பேலிமோனிடே நன்னீர் இறாலின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினமாகும். இது தென் அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகள் முழுவதும் காணப்படுகிறது.[2]
மேக்ரோபிராக்கியம் அமேசோனிகம் சுமார் 16 cm (6.3 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இதன் எடை 30 கிராம் வரை இருக்கும். ஆண் இறால் பெண் இறாலை விடப் பெரியது.
ஆண் இறால் நான்கு தனித்தனி புறத் தோற்றுருவில் காணப்படுகின்றன. முதலாவது ஒளி ஊடுருவக்கூடிய கால்களைக் கொண்ட மிகச்சிறிய பச்சை நிற சாயலுடையது. இரண்டாவது சிறிய, இலவங்கப்பட்டை நிற நகத்தில், பச்சை நிறம் அதிகமாகக் கொண்டது. ஆனால் கால் பகுதிகளில் பல பழுப்பு நிறப் புள்ளிகள் இருப்பதால் இவை பழுப்பு நிறமாக இருக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது பச்சை 1 மற்றும் பச்சை 2 எனப் பெயரிடப்பட்ட இரண்டு பெரிய உருத்தோற்றமுடைய இறால்கள் ஆகும். இவற்றின் இரண்டாவது இணை இடுக்கி கால்கள் மிகப் பெரியது. பாசி பச்சை நிறத்தில் இவை காணப்படும். இந்த இரண்டாவது மார்புக் கால்கள் உடலை விட நீளமானது. மேக்ரோபிராக்கியம் ரோசன்பெர்கி என்ற மாபெரும் ஆற்று இறால்களிலும் இதே போன்ற உருவ மாறுபாடுகள் காணப்படுகின்றன.[3]
மேக்ரோபிராக்கியம் அமேசோனிகம் கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா, பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பெரு, எக்குவடோர், பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. ஒரினோகோ, அமேசான், அரகுவாயா-டோகாண்டின் சு, சாவோ பிரான்சிசுகோ மற்றும் லா பிளாட்டா போன்ற அனைத்து முக்கிய கிழக்கு தென் அமெரிக்க ஆற்றுப் படுகைகளிலும் இது காணப்படுகிறது.[2] சாவோ பிரான்சிசுகோ ஆற்றுப் படுகையில் இது அறிமுகப்படுத்தப்பட்ட இனமாக இருந்தாலும், கடந்த தசாப்தங்களில் பரவலாகிவிட்டது.[4]
மீன்வளத்தில் மே. அமேசோனிகத்தின் உற்பத்தி இன்னும் சிறியதாக இருந்தாலும், இந்த சிற்றினம் பிரேசிலின் நன்னீர் இறால் அறுவடையின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. பிரேசிலின் மாநிலங்களான பாரா மற்றும் அமேசோனாசுசின் பல பாரம்பரிய அமேசானிய சமூகங்களுக்கு இது ஒரு முக்கிய உணவு ஆதாரமாகும். மேலும் இது பொதுவாக மக்களால் உட்கொள்ளப்படுகிறது.[2] வடகிழக்கு பிரேசிலின் சாவோ பிரான்சிசிசுகோ ஆற்றில், உள்ளூர் நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவு ஆதாரமாக 1939ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகத்தினால் பூர்வீக இனங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் அறியப்படவில்லை[4]