அம்பாங் (P099) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Ampang (P099) Federal Constituency in Selangor | |
வாக்காளர் தொகுதி | அம்பாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | அம்பாங்; அம்பாங் ஜெயா; கோம்பாக் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | ரோட்சியா இசுமாயில் (Rodziah Ismail) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 135,101 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 51 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
அம்பாங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Ampang; ஆங்கிலம்: Ampang Federal Constituency; சீனம்: 安邦联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; மற்றும் உலு லங்காட் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P099) ஆகும்.
அம்பாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அம்பாங் மக்களவைத் தொகுதியில் முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 2004-ஆம் ஆண்டில் இருந்து அம்பாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.
கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:
உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டம்; நெகிரி செம்பிலான்; சிலாங்கூர் மாநிலங்களுக்கும் இடையில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும்.
இந்த மாவட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறக் குடியேற்றங்களின் கலவையாகக் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்கள் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள நகரங்களில் குடியேறுகின்றனர். செராஸ், அம்பாங் போன்ற மக்கள் தொகை மையங்கள் பெருநகரப் பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளாக மாறி வருகின்றன.
அம்பாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
அம்பாங் ஜெயா மக்களவை தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது | P099 | 2004–2008 | ரோசைடா தாலிப் (Rozaidah Talib) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | சுரைடா கமாருதீன் (Zuraida Kamaruddin) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2020[5] | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | ||
2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | |||
2022 | பங்சா | |||
15-ஆவது | 2022–தற்போது | ரோட்சியா இசுமாயில் (Rodziah Ismail) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
133,494 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
104,432 | 78.23% | ▼ 6.29 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
104,430 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
283 | - | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
834 | - | - |
பெரும்பான்மை (Majority) |
29,681 | 28.43% | ▼ 26.38 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
ரோட்சியா இசுமாயில் (Rodziah Ismail) |
பாக்காத்தான் (PH) | 56,754 | 54.35% | -16.59 ▼ | |
சாசா லீனா அப்துல் லத்தீப் (Sasha Lyna Abdul Latif) |
பெரிக்காத்தான் (PN) | 27,073 | 25.92% | +25.92 | |
ஐவோன் லோயி வென் (Ivone Low Yi Wen) |
பாரிசான் (BN) | 11,509 | 11.02% | -5.11 ▼ | |
சுரைடா கமாருதீன் (Zuraida Kamaruddin) |
மலேசிய தேசிய கட்சி (PBM) | 4,589 | 4.39% | +4.39 | |
நூருல் அசிகின் மாபவி (Nurul Ashikin Mabahwi) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG) | 2,653 | 2.54% | +2.54 | |
லாய் வாய் சோங் (Lai Wai Chong) |
சபா பாரம்பரிய கட்சி (WARISAN) | 1,423 | 1.36% | +1.36 | |
முகமது சியாபிக் இசுவான் யூனோஸ் (Muhammad Syafiq Izwan Yunos) |
சுயேச்சை | 188 | 0.18% | +0.18 | |
எம் ராவின் (M Raven) |
சுயேச்சை | 148 | 0.14% | +0.14 | |
டான் உவா மெங் (Tan Hua Meng) |
சுயேச்சை | 93 | 0.09% | +0.09 |