அம்பா கணவாய் | |
---|---|
கணவாய்க்கு அருகில் அம்பா குக்கிராமத்திற்கு அருகில் ஒரு ஓடை. | |
அமைவிடம் | மகாராட்டிரம், இந்தியா |
மலைத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
அம்பா மலைக்கணவாய் (Amba Ghat) என்பது இந்தியாவின், மகராட்டிர மாநிலம் இரத்தினகிரி-கோலாப்பூர் சாலையில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 2000அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கணவாய் சகாயத்திரி மலைத்தொடரில் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) அமைந்துள்ளது. மேலும், இம்மலை கண்களை கவரும்படியாகவும், இரம்மியமான காலநிலையையும் கொண்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தின் ஷாஹுவாடிக்கு அருகில் அமைந்துள்ளது.[2] பாவன்கிந்து மற்றும் விசால்காத் ஆகியவை அருகே உள்ள புகழ் பெற்ற இடங்களாகும். கொல்காப்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாகும்.
இப்பகுதி பாராகிளைடிங் விளையாட்டுக்கான இடமாகவும் மாறியுள்ளது.[3]