அயோடின் அசைடு

அயோடின் அசைடு
Iodine azide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடின் அசைடு
வேறு பெயர்கள்
அசிடோ அயோடின், அயோடோ அசைடு
இனங்காட்டிகள்
14696-82-3
ChemSpider 55652
InChI
  • InChI=1S/IN3/c1-3-4-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61763
  • IN=[N+]=[N-]
பண்புகள்
IN3
வாய்ப்பாட்டு எடை 168.92 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிற திண்மம்
சிதைவடையும்
ஆவியமுக்கம் 2 டார்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pbam, எண். 55
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அயோடின் அசைடு (Iodine azide) என்பது IN3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெடிக்கும் வேதிப் பொருளான இது சாதாரண நிலையில் மஞ்சள் நிறத்தில் திண்மப் பொருளாக காணப்படுகிறது.[1] முறைப்படி, இது ஓர் உப்பீனிகளிடை போலி ஆலசன் சேர்மமாகும்.

தயாரிப்பு

[தொகு]

வெள்ளி அசைடும் தனிம அயோடினும் சேர்ந்து வினை புரிந்தால் அயோடின் அசைடு உருவாகிறது.

AgN3 + I2 → IN3 + AgI

வெள்ளி அசைடை ஈரமாக இருக்கும்போது மட்டுமே பாதுகாப்பாகக் கையாள முடியும். ஆனால் தண்ணீரின் சிறிய தடயங்கள் கூட அயோடின் அசைடை சிதைக்கச் செய்யும் என்பதால், வெள்ளி அசைடை இருகுளோரோமீத்தேனில் கரைத்து அயோடினுடன் வினை புரிவதற்கு முன் உலர்த்தும் முகவரைச் சேர்ப்பதன் மூலம் இந்த வினை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழியில் தயாரிக்கும் போது அயோடின் அசைடின் ஒரு தூய கரைசல் கிடைக்கிறது. பின்னர் இதை கவனமாக ஆவியாகி ஊசி வடிவ தங்க நிறப் படிகங்களை உருவாக்கலாம்.[2]

இந்த வினை 1900 ஆம் ஆண்டில் அயோடின் அசைடின் அசல் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. அங்கு இது ஈதர் மற்றும் அயோடினால் மாசுபடுத்தப்பட்ட தூய்மையற்ற படிகங்களாக நிலைப்புத்தன்மையற்ற கரைசல்களாகப் பெறப்பட்டது.[3]

அயோடின் மோனோகுளோரைடும் சோடியம் அசைடும் வெடிக்கும் தன்மை இல்லாத நிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் அயோடின் அசைடையும் தளத்தில் உருவாக்க முடியும்.[4]

பண்புகள்

[தொகு]

திண்ம நிலையில், அயோடின் அசைடு ஒரு பரிமாண பலபடி சார் அமைப்பாக உள்ளது.[5] இரண்டு பல்லுருவங்களாக இச்சேர்மம் உருவாகிறது.[5] இவை இரண்டும் Pbam என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் படிகமாகின்றன. வாயு நிலையில் உள்ள அயோடின் அசைடு ஒரும அலகுகளாக உள்ளது.[6]

I-N பிணைப்பின் முனைவாக்க விளைவால் அயோடின் அசைடு உயர் வினைத்திறன் மற்றும் ஒப்பீட்டு நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. அயோடின் அசைடு மாற்றியமைப்பதால் அறிமுகப்படுத்தப்படும் N3 குழுவானது அதன் உயர் ஆற்றல் உள்ளடக்கம் காரணமாக அடிக்கடி அடுத்தடுத்த எதிர்விளைவுகளுக்கு உட்படும்.

தனித்துப் பிரித்தெடுக்கப்பட்ட சேர்மம் வலுவான அதிர்ச்சி மற்றும் உராய்வு உணர்திறன் கொண்டது.[7] அதன் வெடிப்புத்திறன் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது[1]:

சாதாரண வாயு கன அளவு 265 லி/கி.கி
வெடித்தல் வெப்பம் 2091 கியூல்/கி.கி
திராசுல் மதிப்பீடு 14.0 செ.மீ3/கி

டி.என்.டி அல்லது ஆர்.டி.எக்சு மற்றும் அசிட்டோன் பெராக்சைடு போன்ற பாரம்பரிய வெடிமருந்துகளுடன் ஒப்பிடுகையில் இந்த மதிப்புகள் கணிசமாக குறைவாக உள்ளது. இருகுளோரோமீத்தேனில் உள்ள சேர்மத்தின் நீர்த்த கரைசல்களை (<3%) பாதுகாப்பாகக் கையாளலாம்.

பயன்கள்

[தொகு]

அயோடின் அசைடுக்கு வெடிக்கும் தன்மை இருந்தபோதிலும், புரோமைன் அசைடு போல அயோடின் அசைடு இரசாயனத் தொகுப்பு வினைகளில் பல நடைமுறைப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அயனி மற்றும் இயங்குறுப்பு பொறிமுறைகள் வழியாக ஆல்க்கீன் இரட்டைப் பிணைப்பைச் சேர்க்க உதவுகிறது. ஓர் ஆல்க்கீனுடன் IN3 சேர்த்து தொடர்ந்து இலித்தியம் அலுமினியம் ஐதரைடு சேர்த்து ஒடுக்குவது அசிரிடின் தொகுப்புக்கான ஒரு வசதியான முறையாகும். ஐதரசன் அயோடைடை அகற்ற காரத்தைச் சேர்ப்பதன் மூலம் ஒரு வினைல் அசைடு CH2=CHN3 உருவாகி வெப்பத்தால் சிதைத்து அசிரினை உருவாக்குகிறது. மேலும் இயங்குறுப்பு வினைத்திறன் முறைகளில் α-அசிடோ ஈதர்கள், பென்சைல் அசிட்டால்கள் மற்றும் ஆல்டிகைடுகள் உருவாக்க பலவீனமான C-H பிணைப்புகளில் இயங்குறுப்பு பதிலீடுகள் மற்றும் ஆல்டிகைடுகளை அசைல் அசைடுகளாக மாற்றுதல் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Buzek, Peter; Klapötke, Thomas M.; von Ragué Schleyer, Paul; Tornieporth‐Oetting, Inis C.; White, Peter S. (1993). "Iodine Azide". Angewandte Chemie International Edition 32 (2): 275–277. doi:10.1002/anie.199302751. https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1002/anie.199302751. 
  2. Dehnicke, Kurt (1979). "The Chemistry of Iodine Azide". Angewandte Chemie International Edition 18 (7): 507–514. doi:10.1002/anie.197905071. https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1002/anie.197905071. 
  3. Hantzsch, Arthur (1900). "Ueber den Jodstickstoff N3". Berichte der Deutschen Chemischen Gesellschaft 33 (1): 522–527. doi:10.1002/cber.19000330182. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/epdf/10.1002/cber.19000330182. 
  4. Marinescu, Lavinia; Thinggaard, Jacob; Thomsen, Ib B.; Bols, Mikael (2003). "Radical Azidonation of Aldehydes". Journal of Organic Chemistry 68 (24): 9453–9455. doi:10.1021/jo035163v. பப்மெட்:14629171. https://pubs.acs.org/doi/10.1021/jo035163v. 
  5. 5.0 5.1 Lyhs, Benjamin; Bläser, Dieter; Wölper, Christoph; Schulz, Stephan; Jansen, Georg (2012). "A Comparison of the Solid‐State Structures of Halogen Azides XN3 (X=Cl, Br, I)". Angewandte Chemie International Edition 51 (51): 12859–12863. doi:10.1002/anie.201206028. பப்மெட்:23143850. https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1002/anie.201206028. 
  6. Hassner, Alfred; Marinescu, Lavinia; Bols, Mikael (2005). "Iodine Azide". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.ri007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
  7. Urben, P. G. (1999). Bretherick's Handbook of Reactive Chemical Hazards. Vol. 1 (6th ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3605-X.

புற இணைப்புகள்

[தொகு]