அருந்ததி தேவி | |
---|---|
பிறப்பு | பரிசால், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது வங்காளதேசம்) | 29 ஏப்ரல் 1924
இறப்பு | 1 சனவரி 1990 கொல்கத்தா , மேற்கு வங்காளம் | (அகவை 65)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை, திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் , பாடகர் [1] |
செயற்பாட்டுக் காலம் | 1940 – 1982 |
அருந்ததி தேவி (Arundhati Devi) ( குஹா தகுராதா அல்லது அருந்ததி முகர்ஜி அல்லது முகோபாத்யாய் என்றும் அழைக்கப்படுகிறார்) (1924 - 1990) ஒரு மேற்கு வங்காள நடிகையும், இயக்குனரும், எழுத்தாளரும், பாடகியுமாவார். [2]
அருந்ததி தேவி விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மாணவி ஆவார், அங்கு இவர் சைலஜரஞ்சன் மஜும்தாரிடம் ரவீந்திர சங்கீதத்தில் பயிற்சி பெற்றார். 1940 இல் அனைத்திந்திய வானொலியில் ரவீந்திர சங்கீத பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3] ஒரு நடிகையாக, அருந்ததி தேவி கார்த்திக் சட்டோபாத்யாயின் பெங்காலி திரைப்படமான மஹாபிரஸ்தானர் பாதே (1952) திரைப்படத்தில் அறிமுகமானார். இது யாத்ரிக் என்ற தலைப்பில் இந்தி பதிப்பையும் கொண்டிருந்தது. [4] மேலும் தேவகி குமார் போஸ் போன்ற இயக்குனர்களுடன் நபஜன்மாவில் (1956) இணைந்து பணியாற்றினார். சலாச்சலில் அசித் சென் (1956), பஞ்சதபா (1957), மாவில் பிரபாத் முகோபாத்யாய் (1956), மம்தா (1957), பிசாரக் (1959) மற்றும் ஆகாஷ்பதால் (1960), மற்றும் தபன் சின்ஹா கலாமதி (1958), ஜிந்தர் போண்டி (1961) , ஜதுகிரிஹா (1964) ஆகிய படங்களிலும் நடித்தார். 1963 ஆம் ஆண்டில், பிஜோய் போஸ் இயக்கிய தேசிய விருது பெற்ற வங்காளத் திரைப்படமான பாகினி நிவேதிதா (1962) இல் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான வங்காளத் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்க விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டில், 14 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது அறிமுக இயக்கத்தில் உருவான சுட்டி என்ற திரைப்படத்திற்காக உயர் இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அருந்ததி பிரித்தானிய இந்தியாவில் (இப்போது வங்காளதேசம்) வங்காள மாகாணத்திலுள்ள பரிசாலில் பிறந்தார். 1955 இல் அவர் இயக்குனர் பிரபாத் முகர்ஜியுடன் திருமணம் செய்து கொண்டு குறுகிய காலம் அவருடன் வாழ்ந்தார். இருப்பினும், 1957 இல் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குனர் தபன் சின்ஹாவை சந்தித்தார். இறுதியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் அனிந்தியா சின்ஹா விஞ்ஞானியாக உள்ளார்.
அருந்ததி ஜனவரி [5], 1990 அன்று இறந்தார்.