சதுரங்கத்தில், அரை-திறந்த செங்குத்து வரிசை அல்லது பாதி-திறந்த செங்குத்து வரிசை (half-open file) என்பது ஒரு நிறச்சிப்பாய் மட்டும் கொண்ட செங்குத்து வரிசையாகும். அரை-திறந்த செங்குத்து வரிசையானது கோட்டை மற்றும் அரசிக்கும் தாக்குதல் நடத்துவதை இலகுவாக்கும். அரை-திறந்த செங்குத்து வரிசையானது தனது சிப்பாய்கள் அற்றவருக்கு பயனுடையதாகும்.
பல திறப்புக்கள், சிசிலியன் தற்காப்பு போன்றவை, நிலையைச் சிக்கலாக்குவதையே நோக்கமாகக் கொண்டவை. சிசிலியனின் பிரதான வழியில், 1.e4 c5 2.Nf3 d6 (or 2...e6, அல்லது 2...Nc6) 3.d4 cxd4 4.Nxd4, வெள்ளை அரை-திறந்த d-செங்குத்து வரிசையைப் பெறுகிறது, ஆனால் கருப்பால் அரை-திறந்த c-செங்குத்து வரிசையால் வெள்ளைக்கு அழுத்தம் கொடுக்கமுடியும்.
அரை-திறந்த செங்குத்து வரிசைகளைக் கொண்ட நிலைகளில் சிப்பாய்களின் அமைப்பைக் குலைப்பதே பிரதான நோக்கமாக இருக்கும் ஏனென்றால் இரட்டடுக்குச் சிப்பாய் அல்லது தனித்த சிப்பாய் போன்றவையும் அரை-திறந்த செங்குத்து வரிசைகளை உருவாக்கலாம்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
லோக் வான் வெலி–ஜூடிட் போல்கர், கூகீவன், 1997[1] ஆகியோரின் ஆட்டமானது தாக்குதல்களில் அரை-திறந்த செங்குத்து வரிசைகளின் சக்திக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வெள்ளையை விட சிப்பாய் ஒன்றை குறைவாக வைத்திருந்தும், கருப்பானது இரண்டு சக்திவாய்ந்த அரை-திறந்த செங்குத்து வரிசைகளைக் (f-செங்குத்து வரிசை கோட்டை மற்றும் g-செங்குத்து வரிசை இராணி) கொண்டிருந்தமையால் கருப்பானது வெற்றியடைகிறது.
கருப்பு 30...Rxf2+! விளையாடியதும், தொடரும் நகர்த்தல்கலான, 31.Rxf2 Qxg3+ 32.Kf1 Qxf2# என்பவற்றை தெரிந்த வெள்ளை தனது தோல்வியை ஒத்துக்கொள்கிறது.