இந்திய விமானப் படைத் தலைவர் அர்ஜன் சிங் | |
---|---|
Marshal of the Indian Air Force Arjan Singh and (right) the ceremonial baton | |
பிறப்பு | 15 ஏப்ரல் 1919 பைசலாபாத், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 செப்டம்பர் 2017 |
சார்பு | இந்தியா (1938-1947) இந்தியா (1947 முதல்) |
சேவை/ | இந்திய வான்படை |
சேவைக்காலம் | 1938–1969 [1] |
தரம் | இந்திய விமாப்படைத் தலைமைப் படைத்தலைவர் |
கட்டளை | No. 1 Squadron IAF Ambala Air Force Station Western Command VCAS |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1965 |
விருதுகள் | பத்ம பூசண் General Service Medal 1947 |
மார்சல் அர்ஜன் சிங் (Arjan Singh), (பஞ்சாபி: ਅਰਜਨ ਸਿੰਘ) (பிறப்பு: 15 ஏப்ரல் 1919 - இறப்பு: 16 செப்டம்பர் 2017) பிரித்தானிய இந்தியாவின் தற்கால பஞ்சாபில் உள்ள பைசலாபாத் நகரத்தில், 15 ஏப்ரல் 1919 அன்று பிறந்தவர். இவரது தந்தை தர்பரா சிங் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் குதிரைப் படையில் பணியாற்றி 1943இல் ஓய்வு பெற்றவர்.[2]
இங்கிலாந்து நாட்டின் அரச விமானப்படைக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அர்ஜன் சிங் 1 ஆகஸ்டு முதல் 15 சூலை 1969 முடிய இந்திய விமானப்படையின் தலைமைத் படைத்தலைவராகப் பணியாற்றியவர்.
ஓய்வுக்குப் பின்னர் தில்லி மாநில ஆளுனராகவும், சுவிட்சர்லாந்து மற்றும் கென்யா நாடுகளில் இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியவர்.
பல இராணுவ விருதுகளுடன் பத்ம பூசண் விருதையும் பெற்றவர்.