அர்ஜுன் சரண் சேத்தி | |
---|---|
உறுப்பினர்: 5ஆவது, 7ஆவது, 10ஆவது, 12ஆவது, 13ஆவது, 14ஆவது, 15ஆவது & 16ஆவது மக்களவை | |
பின்னவர் | மஞ்சுலதா மண்டல் |
தொகுதி | பத்ராக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஓடாங், பத்திரக் மாவட்டம், ஒடிசா | 18 செப்டம்பர் 1941
இறப்பு | 8 சூன் 2020 புவனேசுவரம், ஒடிசா | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுபாத்ரா |
பிள்ளைகள் | 3 ம்கன்கள் & 2 மகள்கள் |
வாழிடம்(s) | பத்ரக், ஒடிசா |
As of 08 சூலை, 2024 |
அர்ஜுன் சரண் சேத்தி (Arjun Charan Sethi-18 செப்டம்பர் 1941-8 சூன் 2020) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1]
சேத்தி 1998 முதல் 2019 வரையிலும், 1991 முதல் 1996 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும், 1971 முதல் 1977 வரையிலும் பத்ராக் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையில், சேத்தி முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியையும், பின்னர் பிஜு ஜனதா தளத்தையும், இறுதியாக அவர் இறக்கும் போது பாரதிய ஜனதா கட்சியிலும் செயல்பட்டார்.
1971ஆம் ஆண்டில், இவர் முதல் முறையாகக் காங்கிரசு வேட்பாளராக பத்ராக் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு (ஐ.) வேட்பாளராக இதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டில் இதே தொகுதியிலிருந்து ஜனதா தளம் வேட்பாளராக மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998, 1999, 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பிஜு ஜனதா தளம் வேட்பாளராக மீண்டும் இத்தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 முதல் 2004 வரை அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
2019ஆம் ஆண்டில், இவர் பிஜு ஜனதா தளத்தை விட்டு வெளியேறி தனது மகன் அபிமன்யு சேத்தியுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
சேத்தி புவனேசுவரில் உள்ள ஒரு மருத்துவமனையில் 8 சூன் 2020 அன்று இறந்தார்.[1]