தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 23 செப்டம்பர் 1998 குசுரோப்பூர், ஜலந்தர் மாவட்டம், பஞ்சாப் (இந்தியா)[1] | |||||||||||||||
உயரம் | 1.76 மீ[2] | |||||||||||||||
விளையாடுமிடம் | நடுக்களம் | |||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2014– | இந்தியா, 21 வயதுக்குக் கீழ் | 4 | (0) | |||||||||||||
2018– | இந்தியா | 23 | (1) | |||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 15 சூலை 2019 |
அர்திக் சிங் (Hardik Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 அன்று இவர் பிறந்தார். இந்திய வளைகோல் பந்தாட்ட தேசிய அணியில் அர்திக் ஓர் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடுகிறார்.[3] டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் ஓர் உறுப்பினராக அர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய இளையோர் அணியின் துணைத் தலைவரான பிறகு, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஆண்கள் வளைகோல் பந்தாட்ட வெற்றியாளர் கோப்பையில் அறிமுகமாகி மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடத் தொடங்கினார். மேலும் 2018 ஆண்கள் வளைகோல் பந்தாட்ட உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் சிங்கின் தந்தை வரீந்தர்பிரீத் சிங் ரே இந்தியாவுக்காக விளையாடினார். மற்றும் தாத்தா பிரீதம் சிங் ரே இந்திய கடற்படையில் வளைகோல் பந்தாட்டப் பயிற்சியாளராக இருந்தார்.[4] தனது தந்தை மாமா மற்றும் முன்னாள் இந்திய இழுத்து-தாக்கும் ஆட்டக்காரர் இயுக்ராச் சிங்கையும் தனது வழிகாட்டியாக கருதுகிறார். இவரது அத்தை ராச்பீர் கவுரும் இந்தியாவுக்காக பன்னாட்டு அளவில் விளையாடியுள்ளார். அவரது கணவர் குர்மெயில் சிங் 1980 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றார், அப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)