அலக்சு ஓ'நெல்

அலெக்சு ஓ'நெல் ( Alexx O'Nell இயற்பெயர் அலெக்சாண்டர் லியோனார்ட் ஓ நீல் பிறப்பு: ஜூலை 26, 1980 ) என்பவர் ஓர் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தஇந்திய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் தற்போது இந்திய மொழிகளித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.[1] மெயின் அவுர் சார்லஸ் , சீனி கம், மதராசபட்டினம், ஜோக்கர், ஏக் ஜே சிலோ ராஜா, சிட்டகாங் மற்றும் உருமி (ஏக் யோதா ஷூர்வீர்) ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

ஓ'நெல் அமெரிக்காவில் உள்ள சமூகம் மற்றும் பிராந்திய நாடக திரையரங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[2][3] பின்னர் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றினார்.[4] 2007 ஆம் ஆண்டில் சீனி கம் திரைப்படத்திலும் அதே ஆண்டில் லோயின்ச் ஆஃப் பஞ்சாப் பிரசன்ஸ் திரைப்படங்களில் நடித்தார். இந்தியாவின் முன்னணி நடன நிகழ்ச்சியான நாச் பாலியே நடனப் போட்டியில் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.

2010 ஆம் ஆண்டில் வெளியான மதராசப் பட்டினம் திரைப்படத்தில் நடித்தார்.பின்னர் இவர் ஜான்சி கி ராணி எனும் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தார்.

இந்திய நடிகை ஸ்வேதா கெஸ்வானியுடன் இருந்த உறவைத் தொடர்ந்து ஓ'நெல் மற்றும் கெஸ்வானி ஆகியோர் அக்டோபர் மற்றும் நவம்பர் 2008 இல் நடைபெற்ற நான்கு விதமான நிகழ்வுகளில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.[5]

ஓ'நெல் மற்றும் கெஸ்வானி ஆகியோர் 2011 ஆம் ஆண்டின் மத்தியில் பிரிந்து சென்றனர். அதுவரை இவர்கள் இந்தியாவின் மும்பையில் ஒன்றாக வாழ்ந்தனர்.[5]

தொழில்

[தொகு]

பொழுதுபோக்கு அல்லாதவைகள்

[தொகு]

ஓ'நெல் சிறு வயதிலிருந்தே பல்வேறு வேலைகளில் பணியாற்றத் தொடங்கினார். மேலும் தனது இளமைக் கால வாழ்க்கை முழுவதும் ஆலோசனை,சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர மாதிரி போன்ற பல பணிகளில் ஈடுபட்டார்.[6] லெஸ்டர் இன்க் என்ற விளாம்பரத் துறையில் இவர் பணியாற்றினார்.

விளம்பரம்

[தொகு]

நாடகங்களில் பணிபுரிந்த பின்னர், ஹூண்டாய் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களின் விளம்பர மாதிரியாக இவர் நடித்தார்.[3] ரோமா சுவிட்சுகள், பானாசோனிக் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எஸிஸ் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் 2006 முதல் 2009 வரை மவுலின் கிளாசியர் வாசனை திரவியங்களுக்கான விளம்பர தூதராக இருந்தது ஆகியவை இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.[6]

2018 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் ராக் தேஷ் மற்றும் இன்சைட் எட்ஜ் எனும் தொலைக்காட்சி நாடகம் ஆகியவை வெளியாகின. மேலும் டாக்டர் ருக்மாபாய் , சை ரா நரசிம்ம ரெட்டி , டிரையல் ஆஃப் சத்யம் மற்றும் பமராசி ஜசூஸ் ஆகிய திரைப்படங்கள் 2019 ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவரின் தாய் டச்சு நாட்டினர் ஆவார். இவரின் தந்தை ஐரிஷ்-அமெரிக்க வம்சா வளியினைச் சேர்ந்தவர் ஆவார். ஓ'நெல் அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிறந்தார்.இவருக்கு ஒரு சகோதரி உள்ளார். செப்டம்பர் 2007 இல் திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படங்கள்

[தொகு]

2007 ஆம் ஆண்டில் சீனி கம் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமனார். அதே ஆண்டில் லோயின்ச் ஆஃப் பஞ்சாப் பிரசன்ஸ் திரைப்படங்களில் நடித்தார்.மெயின் அவுர் சார்லஸ் , சீனி கம், மதராசபட்டினம், ஜோக்கர், ஏக் ஜே சிலோ ராஜா, சிட்டகாங் மற்றும் உருமி (ஏக் யோதா ஷூர்வீர்) ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

}மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alexx O'Nell in Shirish Kunder's 'Joker'". http://timesofindia.indiatimes.com/entertainment/tv-/Alexx-O'Nell-in-Shirish-Kunders-Joker/articleshow/7959214.cms. 
  2. "An American and the Bollywood barrier". Ruchika Kher, ians.in. April 12, 2011.
  3. 3.0 3.1 "Alexx O'Nell's resume at IMDB".
  4. PRASHANT GOLECHA (July 17, 2007). "Bollywood bites Shweta Keswani's beau Alexx". Archived from the original on 2012-05-24. பார்க்கப்பட்ட நாள் 2011-04-19.
  5. 5.0 5.1 "Four Weddings and a Fallout". The Times of India - Mumbai Mirror. April 11, 2011. Archived from the original on 2011-04-15. பார்க்கப்பட்ட நாள் 2011-04-19.
  6. 6.0 6.1 Vipasha Pillai. "In conversation with Shweta and Alexx". Hill Road Media. Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2011-04-19.