அலிசியா இராத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. அலிசியே
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு அலிசியே இங்கர் மற்றும் பலர் 1984 |
நைக்டிபேட்ராச்சசு அலிசியே (Nyctibatrachus aliciae)(அலிசியா இராத் தவளை அல்லது அல்சி இராத் தவளை) என்பது நைக்டிபட்டிராசிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரளாவில் உள்ள பொன்முடி மலை மற்றும் அத்திரிமலையில் உள்ள தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகப் பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] இந்த தவளைகள் கரையோர வாழ்விடங்கள் மற்றும் வெப்பமண்டல ஈரமான பசுமையான மற்றும் பகுதி-பசுமை காடுகளில் உள்ள நீரோடைகளில் வாழ்கின்றன. ஓரளவிற்கு வாழ்விட மாற்றத்தைப் பொறுத்துக்கொள்ளும் வகையில் தகவமைப்பினை இந்த சிற்றினம் பெற்றுள்ளது. உள்நாட்டில் பொதுவானதாக இருந்தாலும், இதனுடைய குறுகிய வாழிடம் மற்றும் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.