பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சில் அலுமினியம்(I)
| |
இனங்காட்டிகள் | |
20768-67-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AlOH | |
வாய்ப்பாட்டு எடை | 43.99 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | AlSH[1] |
ஏனைய நேர் மின்அயனிகள் | காலியம் ஐதராக்சைடு, இண்டியம் ஐதராக்சைடு, தாலியம்(I) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம்(I) ஐதராக்சைடு (Aluminium(I) hydroxide) AlOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சில் அலுமினியம்(I), அலுமினியம் மோனோ ஐதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. ஓர் ஐதராக்சைடு அயனியுடன் இணைக்கப்பட்ட +1 ஆக்சிஜனேற்ற நிலையில் அலுமினியம் இச்சேர்மத்தில் உள்ளது. ஆக்சிசன் நிறைந்த சிவப்பு பேரரக்கன் நட்சத்திரத்தின் உறையில் உள்ள மூலக்கூறு பொருளாக அலுமினியம்(I) ஐதராக்சைடு கண்டறியப்பட்டுள்ளது, இந்த விண்மீனில் உலோகங்கள் அல்லது ஐதராக்சைடுகளைக் கொண்ட பொருட்கள் அரிதாகக் கருதப்படுகின்றன.[2]
ஆய்வகத்தில் AlOH அலுமினியத்தை சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் அது குறைந்த அழுத்த ஐதரசன் பெராக்சைடு ஆவியாக ஆவியாகிறது.[3] அலுமினியம் நீராவி, ஐதரசன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றின் கலவையை ஆர்கானுடன் 10 கெல்வின் வெப்பநிலையில் வினைபுரியச் செய்வது மற்றொரு தயாரிப்பு முறையகும். AlOH உடன், Al(OH)2, Al(OH)3, HAl(OH)2, வளைய-AlO2 மற்றும் AlOAl மூலக்கூறுகளும் சேர்ந்து உருவாகின்றன.[4]
கட்டமைப்பில் உள்ள Al-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 1.682 Å ஆகவும் , O-H பிணைப்பின் பிணைப்பு நீளம் 0.878 Å. ஆகவும் உள்ளன.[3] சுழலும் மாறிலிகள் மதிப்பு B0=15,740.2476 மெகா எர்ட்சு மற்றும் D0=0.02481 மெகா எர்ட்சு என்றும் கணக்கிடப்பட்டுள்ளன..[3]