அலெக்சி வில்லெல்மினா ரூட் (Alexey Wilhelmina Root) என்பவர் ஓர் அமெரிக்க சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியரும் எழுத்தாளருமான இவர் 1989 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மகளிர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். அனைத்துலக பெண்கள் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டமும் இவருக்கு உரியதாகும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அலெக்சி முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
அமெரிக்காவின் டல்லசு[1] நகரத்திலுள்ள டெக்சசு பல்கலைக்கழகத்தில் பல்துறை ஆய்வுப்பிரிவில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். அக்காலத்தில் சதுரங்கத்திற்கும் கல்விக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆறு நூல்கள் எழுதினார்.