அல்காப் (Alkap) என்பது மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள மால்டா மற்றும் பிர்பும் மற்றும் வங்காளதேசத்தின் ராஜசாகி மற்றும் சபாய் நவாப்கஞ்ச் ஆகிய இடங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும். [1] மேலும் இந்த நடனம் சார்க்கண்டு மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளான தும்கா மற்றும் பூர்ணியா போன்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.[2]
அல் என்றால் 'வசனத்தின் ஒரு பகுதி'[2] என்றும் காப் என்றால் 'காவியம்' என்றும் பொருள். அல் என்ற வார்த்தையின் மற்றொரு பொருள் 'கூர்மையானது' என்பதாகும்.[3]
இசை, நடனம் மற்றும் நாடக விளக்கக்காட்சியின் கலவையே அல்காப் ஆகும். பத்து முதல் பன்னிரண்டு கலைஞர்காய்கள் கொண்ட ஒரு அல்காப் குழுவில் ஒரு ஆசிரியரும் இரண்டு அல்லது மூன்று இளைஞர்கள் கொண்ட பாடகர்களும் மற்றும் இசைக்கலைஞர்களும் இடம் பெறுவர். அல்காப் நிகழ்ச்சியானது அசார் வந்தனா, சோரா, காப், பைத்தகி கான் மற்றும் கெம்டா பாலா என ஐந்து பகுதிகளாக நிகழ்த்தப்படுகிறது. மேலும் கிராமப்புற சமூகத்தின் பிரதிபலிப்பாக அவர்களின் சமூக-பொருளாதார நிலையில் கவனம் செலுத்துகிறது.[1][2]
சாகித்திய அகாதமி விருது பெற்ற சையத் முஸ்தபா சிராஜ் என்ற எழுத்தாளரின் புதைனமான மாயாமிர்தங்கா ஒரு அல்காப் குழுவைப் பற்றிய கதையாகும்.