ஆசிய நெடுஞ்சாலை 83 (Asian Highway 83) ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஏஎச்83 என்ற பெயராலும் இச்சாலையை அடையாளப்படுத்தலாம். அசர்பைசானின் உள்ள கசாக் மாவட்டத்திலுள்ள கசாக் என்ற நகரத்தில் தொடங்கி ஆர்மேனியாவின் யெரெவான் என்னும் இடம் வரை செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலை இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 172 கிலோமீட்டர் ஆகும்.