ஆண்டிமோணைடு

ஆண்டிமோணைடு (Antimonide) என்பது Sb3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அயனியாகும். சிடிப்னைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

ஆண்டிமோணைடுகள் அதிக நேர்மின்னூட்டம் கொண்ட தனிமங்களைக் கொண்ட ஆண்டிமனியின் சேர்மங்கள் ஆகும். கார உலோகங்கள் அல்லது பிற முறைகளால் ஆண்டிமனியைக் குறைப்பது பல்வேறு வகையான கார உலோக ஆண்டிமோணைகளுக்கு வழிவகுக்கிறது.[1] Li3Sb}}, Na3Sb ஆகிய சேர்மங்களில் உள்ள Sb3− ஓர் அறியப்பட்ட ஆண்டிமோணைடு அயனியாகும். Cs4Sb2 சேர்மத்தில் Sb24−, SrSb3 சேர்மத்தில் உள்ளது போன்ற Sb68− தனித்தனியான ஆண்டிமனி சங்கிலிகள், NaSb, RbSb சேர்மங்களில் உள்ளது போன்ற (Sb)n எல்லையற்ற சுருள்கள், Sb2−4, Sb3−7 போன்ற சமதள நான்கு உறுப்பு வளையங்கள், Cs3Sb சேர்மத்திலுள்ள கூடுகள், BaSb3 சேர்மத்திலுள்ள வலை வடிவ Sb2−3 அனைத்தும் ஆண்டிமோணைடு அயனிகளாகும்.

சில ஆண்டிமோணைடுகள் குறைக்கடத்திகள் ஆகும். எ.கா. இண்டியம் ஆண்டிமோணைடு போன்ற போரான் குழுவைச் சேர்ந்த சேர்மங்கள். ஆண்டிமோணைடு அயனி ஒரு குறைக்கும் முகவராக இருப்பதால் பல ஆண்டிமோணைடுகள் வெப்பமடையும் போது ஆக்சிசனோடு சேர்ந்து எரியும் அல்லது சிதைந்துவிடும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. King, R. Bruse (2005). Encyclopedia of Inorganic Chemistry, Second Edition (10 Volume Set) (2nd ed.). Wiley. p. 211. ISBN 9780470860786.