தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ஆபிரகாம் இராசன் (Abraham Rajan) ஓர் இந்திய முன்னாள் தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் தற்போது இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளராக சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் உள்ளார்.
ஆபிரகாம் இராசன் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் 800 மீ., ஓட்டப்பந்தயத்தில் 1: 50.21 விநாடிகள் என்ற நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். [1] [2] இது ஆபிரகாமின் தடகள வாழ்க்கையின் முடிசூட்டு சாதனையாகும். இது தேசிய மற்றும் கல்லூரி மட்டத்திலும் சிறப்பான சாதனையாக இடம்பெற்றது. இவரது 800 மீட்டர் ஓட்ட நேரம் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்னும் ஒரு சாதனையாகும்.