ஆர். வேதவல்லி (பி. 1935) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]
ஆர். வேதவல்லி தமிழ்நாட்டின் மன்னார்குடியில் ராமசாமி ஐயங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.
தனது இளம்வயது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். அகில இந்திய வானொலியின் 'பழமைவாய்ந்த இசை'க்குரிய முதற்பரிசினை இவர் பெற்றுள்ளார். இப்பரிசு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.