ஆறாட்டுப்புழா பூரம் | |
---|---|
வகை | கோயில் திருவிழா |
அனுசரிப்புகள் | கோயில் திருவிழா, குடமட்டம் , வாண வேடிக்கை ( வெடிகெட்டு ) |
நாள் | மலையாள நாட்காட்டியில் (மார்ச் / ஏப்ரல்) மினாம் நட்சத்திரம் |
ஆறாட்டுப்புழா பூரம் (Arattupuzha Pooram) என்பது இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான கோயில் திருவிழா ஆகும். ஆறாட்டுப்புழா பூரம் விழாவானது இதன் பெருமை மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றின் காரணமாக கேரளத்தின் அனைத்து பூரம் விழாக்களின தாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரமாண்டமான விழாவுக்கு, அருகிலும், தொலைதூர இடங்களிலிருந்தும் நிறையபேர் ஆரட்டுப்புழா கிராமத்தை வந்தடைகிறனர். ஏழு நாள் நடக்கும் திருவிழாவின் உச்சமானது விழாவின் கடைசி இரண்டு நாட்கள் ஆகும். திருவிழாவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலை சாஸ்தவிந்தே மேளம் என்று அழைக்கப்படும் விழாவின் ஒரு பகுதியாக, தாளக் குழுக்கள் மற்றும் அலங்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் நடத்தப்படும். ஆறாட்டுப்புழா சாஸ்தாவின் பஞ்சரிமேளம் என்பது வேறு எந்த இரவு பூரம் விழாக்களையுவிட மிகுதியான தாளக்கலைஞர்கள் இசைக்கும் இடமாகும். 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சாஸ்தவிந்தே மேளத்தில் நிகழ்த்துகிறார்கள். இது மிகவும் அரிதான அணிவகுபாகும். இது ஆராட்டுப்புழா பூரத்தைத் தவிர திருப்பூணித்துறையில் பூர்நாத்ராயீசா கோயில் மட்டுமே காண முடியும்
இந்த விழாவானது திருச்சூர் மாவட்டத்தின் ஆறாட்டுப்புழாவில் உள்ள ஆறாட்டுபுழா கோவிலில் நடைபெறுகிறது. பூரம் தேவமேளா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது கடவுள்களின் உற்சவமாகும். இதில் அருகிலுள்ள கோயில்களில் இருந்து பெருமளவிலான உற்சவர்கள் கலந்துகொள்வர். இதுல் திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கோயில்களில் உள்ள மொத்தம் 23 தெய்வ உற்சவர்கள் இந்தப் பூரத்தில் கலந்து கொள்கின்றனர், இது இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பழமையான கோயில் திருவிழாவாக கருதப்படுகிறது. ஆறாட்டுப்புழா பூரத்தில் பங்கேற்கும் முக்கியமான தெய்வங்கள் ஓரகத்து அம்மா திருவாடி செர்பு பகவதி போன்றவை ஆகும். [1] [2] [3] [4]