இந்திசர் உசைன் (Intizar Hussain உருது: انتظار حسین ; டிசம்பர் 21, 1925 - பிப்ரவரி 2, 2016) உருது புதினங்கள் , சிறுகதைகள், கவிதை மற்றும் புனைகதை ஆகியவற்றை எழுதிய பாகிஸ்தான் எழுத்தாளர் ஆவார். இவர் பாகிஸ்தானின் முன்னணி இலக்கிய நபராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் 2013 இல் புக்கர் பரிசிற்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.[1]
இந்திசார் உசைன் திபாய், புலந்த்ஷல், பிரித்தானியாவின் இந்தியா 1925 ஆம் ஆண்டில் பிறந்தார். பாக்கிஸ்தானுக்கு சுந்தந்திரம் கிடைத்த பிறகு 1947 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தது.. இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை, ஆதாரங்களின்படி 21 டிசம்பர் 1922 அல்லது 1923 அல்லது 1925 ஆம் ஆண்டுகளில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. 1942 இல் இடைநிலைத் தேர்வில் (அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி சமமானவர்) தேர்ச்சி பெற்ற பின்னர் 1944 ஆம் ஆண்டில் மீரட் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் 1946 ஆம் ஆண்டில் உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவரின் மனைவி அலியா பேகம் 2004 ஆம் ஆண்டில் இறந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.
இவர் சிறுகதைகள், புதினங்கள் மற்றும் கவிதைகளை உருது மொழியில் எழுதினார், மேலும் டான் செய்தித்தாள் மற்றும் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு இலக்கிய கட்டுரைகள் எழுதினார்.[2][3] இவரது பல நூல்கள் ஆங்கிலத்த்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஏழாவது கதவு(செவன்த் டோர் ), இலைகள் மற்றும் பஸ்தி (லீவ்ச் அண்ட் பஸ்தி) ஆகியவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது பகுறிப்பிடத்தக்க சில நூல்களில் அடங்கும். இவர் எழுதிய ஐந்து புதினங்களில் - சாந்த் கஹான் (1952), தினர் தஸ்தான் (1959), பஸ்தி (1980), தாஸ்கிரா (1987), ஆஜே சமந்தர் ஹை (1995) - பஸ்தி உலகளாவிய பாராட்டைப் பெற்றார்.[4] இந்துஸ்தான் சே ஆக்ரி காட், ஆகே சுமந்தர் ஹை, ஷெர்-இ-அப்சோஸ், ஜடகா கதைகள், ஜனம் கஹானியன் மற்றும் வோ ஜோ கோ கயே ஆகியோர் அவரது மற்றைலக்கியப் படைப்புகள் ஆகும்.
பிப்ரவரி 2, 2016 அன்று, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட இவர் லாகூரில் உள்ள பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையத்தின் தேசிய மருத்துவமனையில் இறந்தார்.[5][6] இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை சாதத் அசன் மாண்டோவுக்குப் பிறகு "உலகின் மிகச்சிறந்த பாகிஸ்தான் எழுத்தாளர்" என்று புகழாரம் சூட்டியது .
2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திசார் உசேன் விருது எனும் விருதினை அறிவித்தது, இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலக்கிய நபருக்கு வழங்கப்படும்.[7]
ஷெர்ஷாட்டின் மரணம் [8] 1979 ஆம் ஆண்டில் பஸ்தி [9] 1999 ஆம் ஆண்டில் சிராகோன் கா துவான் (நினைவுக் குறிப்பு) மற்றும் 2002 ஆம் ஆண்டில் சாந்த் கஹான் [10] அதற்கு அடுத்த ஆண்டில் அஜ்மல்-ஐ அசாம் [11] 2007 இல் சூரக் தமகா நூல் 2011 ஆம் ஆண்டில் கிஸ்ஸா கஹானியன் [12] 2014 ஆம் ஆண்டில் அப்னி டேமிஸ்ட் மெய்ன் எனும் நூலினை இவர் எழுதினார்.