இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் குளிர்கால விளையாட்டுக்கள் எப்போதும் நடக்கக்கூடியவையாகும் . குல்மார்க், காஷ்மீர் மற்றும் மணாலி ஆகிய இடங்களில் பனிச்சறுக்கு போட்டிகள் ஒவ்வொரு குளிர்காலத்திலும் நடைபெறும். ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் (முன்னர் உத்தராஞ்சல்), சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் குளிர்கால விளையாட்டுக்கள் மிகவும் இயல்பானவையாகும். பனிச்சறுக்கு, பனி ரக்பி, பனி சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பனி கால்பந்து ஆகியவை இந்தியாவில் விளையாடப்படும் குளிர்கால விளையாட்டுக்களில் சில. 1998 முதல் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியா லூஜில் பங்கேற்றாலும் பனிச்சறுக்கு விளையாட்டு இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இந்திய பண்ட்டீ விளையாட்டு கூட்டமைப்பின் தலைமையகம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டியில் உள்ளது. '''லூஜ் விளையாட்டு''' இங்குள்ள மலைவாசிகளால் '''ரெரி''' எனப்படும் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் இன்னும் பெரிய அளவில் இங்கே விளையாடப்படுகிறது.
சர்வதேச குளிர்கால விளையாட்டு போட்டிகளில் (ஆசிய தங்கம் 2011, ஆசிய வெள்ளி 2009, ஆசிய வெண்கலம் 2008 [1], ஆசிய வெள்ளி (இரட்டையர்) 2005, ஆசிய வெண்கலம் (ஒற்றையர்) 2005)[2] போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் சிவ கேசவன் ஆவார். ஆறு ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ள[3] அவர், தற்போது 134.4 கிமீ/ம என்ற வேகத்தில் சென்று ஆசிய வேக சாதனையும் படைத்துள்ளார். இந்த சாதனை அவரை ஆசியாவிலேயே அதிவேக மனிதன் என்ற பெருமைக்கு ஆக்கியது
பனிச்சறுக்கு மலையேறுதல் என்பது பனிச்சறுக்கு விளையாட்டின் மற்றொரு வடிவமாகும், இது பொதுவாக தொலைதூர குளிர் பிரதேச பகுதிகளில் நடத்தப்படுகிறது. பனிச்சறுக்கு வீரர்கள் தேர்வுசெய்யக்கூடிய தொடக்க நிலை மற்றும் இடைநிலை சரிவுகள் உள்ளன.[4] இது ஒரு வகையான வன பனிச்சறுக்கு. தொலைதூர குளிர் பிரதேச பகுதிகளில்இது நடைபெறுவதால் '''பேக் கன்ட்ரி ஸ்கீயிங்''' என்றும் அழைக்கப்படுகிறது. இது காஷ்மீரில் 1979 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இரண்டு உள்ளூர் பனிச்சறுக்கு வீரர்களான முஹம்மது யூசுப் மற்றும் மெஹ்ராஜ் தின் ஆகியோர் லிடர் பள்ளத்தாக்குக்கு ஸ்கை-டூரிங் பயணத்தை மேற்கொண்டனர். 1984 ஆம் ஆண்டில் முஹம்மது யூசுஃப் தலைமையிலான 10 சறுக்கு வீரர்கள் அடங்கிய குழு, லிடர் பள்ளத்தாக்கிலிருந்து சிந்து பள்ளத்தாக்குக்கு சன்மௌஸ் கணவாய் வழியாக ஒரு பயணத்தை மேற்கொண்டது. அது இன்னும் சாதனையாகவே உள்ளது. இப்படியாக பயணங்களாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பனிச்சறுக்கு மலையேறுதல் விளையாட்டு காலப்போக்கில் ஒரு போட்டிபோடும் விளையாட்டாக மாறிவிட்டது. இத்தகைய விளையாட்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் ஐரோப்பாவில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.