நியூசிலாந்து |
இந்தியா |
இந்தியா-நியூசிலாந்து உறவுகள் (India–New Zealand relations) என்பது இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இருக்கும் தொடர்புகள் குறித்ததாகும். இவ்விரண்டு நாடுகளும் ஒரு காலத்தில் பிரித்தானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தன. நியூசிலாந்தில் இந்திய வம்சா வளியின மக்கள் சுமார் 105100 நபர்கள் வசிக்கின்றனர்.[1][2]
இந்தியா-நியூசிலாந்து உறவுகள் சுமூகமாக இருந்தன. ஆனால் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் அது விரிவானதாக இல்லை. ஆனால், சமீபத்திய இந்தியாவின் ஈர்க்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காரணமாக நியூசிலாந்து இந்தியாவுடன் உறவுகளை விரிவுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.
1983 ஆம் ஆண்டில் இருநாடுகளும் ஒரு கூட்டு வர்த்தகக் குழுவை அமைத்தன. இருதரப்பு உறவுகள் மூலமாகவோ அல்லது கிழக்காசிய உச்சி மாநாடு மூலமாகவோ ஒரு சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக விவாதித்தன. விவசாய மானியங்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் தோன்றியதால் இத்திட்டம் எழுச்சி பெறவில்லை. கல்விக்கான ஒத்துழைப்பில் சிறிதளவு சாதகமான நிலை காணப்படுகிறது. சுமார் 10000 இந்திய மாணவர்கள் நியூசிலாந்தில் கல்வி கற்று வருகின்றனர்.[3]
இரண்டு நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பு வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. கடற்படை தொடர்பான செயல்பாடுகளில் ஒத்துழைப்பு உறவுகள் காணப்படுகின்றன. இருதரப்பு படையினரும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படையில் கொசோவோ மற்றும் சூடான் நாடுகளில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தனர்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)