வகை | அரசிதழ் |
---|---|
வெளியீட்டாளர் | இந்திய அரசு வெளியீட்டு துறை |
நிறுவியது | 1950 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | புது தில்லி |
ISSN | 0254-6779 |
OCLC எண் | 1752771 |
இணையத்தளம் | www |
இந்திய அரசிதழ் (The Gazette of India, இந்தி:भारत का राजपत्र) அல்லது கெசட் ஒரு சட்டப்படி முறையான ஆவணம் மற்றும் நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசின் செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்திய அரசின் அலுவல் பதிவேடு ஆகும்.[1]. இதனை வாரமொருமுறை வெளியீடுகள் கட்டுப்பாட்டு அலுவலரால் புது தில்லியிலிருந்து வெளியிடப்படுகிறது[2].
எல்லாவிதமான அரசிதழ் அறிவிக்கைகளும் அரசிதழ் நகல்களும் பொதுமக்களுக்கு இந்திய அரசின் வெளியீடுகள் துறையால் விற்கப்படுகிறது.[3]. மின்னணு ஊடக வடிவிலும் (இ-கெசட்) கிடைக்கிறது.[4].