இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
भारत के महान्यायवादी | |
---|---|
Type | இந்திய நீதித்துறை |
சுருக்கம் | AG |
வாழுமிடம் | புது தில்லி, இந்தியா |
அலுவலகம் | A-144, நீதி பாக், புது தில்லி-110049[1] |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய அமைச்சரவை அலோசனையினபடி |
பதவிக் காலம் | குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலின் படி |
அரசமைப்புக் கருவி | இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 76ன் படி |
உருவாக்கம் | 28 சனவர் 1950 |
முதலாமவர் | எம். சி. செடாவாத் |
துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் | இந்திய அரசுசின் துணை தலைமை வழக்குரைஞர் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் அல்லது முதன்மை ஆதரவுரைஞர் (Attorney General of India) என்பவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[2] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இவருக்கு அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் கூடுதல் ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.
எம். சி. செடால்வத் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் ஆவார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவிற்கான அரசுத் தலைமை வழக்குரைஞர் பட்டியல் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.[3]
பெயர் | பதவிக் காலம் | பிரதமர் |
---|---|---|
எம். சி. செடால்வத் | 28 சனவரி 1950 – 1 மார்ச் 1963 | ஜவகர்லால் நேரு |
சி. கே. தப்தரி | 2 மார்ச் 1963 – 30 அக்டோபர் 1968 | ஜவகர்லால் நேரு; லால் பகதூர் சாஸ்திரி |
நைரென் டி | 1 நவம்பர் 1968 – 31 மார்ச் 1977 | இந்திரா காந்தி |
எஸ். வி. குப்தே | 1 ஏப்ரல் 1977 – 8 ஆகத்து 1979 | மொரார்ஜி தேசாய் |
எல். என். சின்கா | 9 ஆகத்து 1979 – 8 ஆகத்து 1983 | சரண் சிங்; இந்திரா காந்தி |
கே. பராசரன் | 9 ஆகத்து 1983 – 8 திசம்பர் 1989 | இந்திரா காந்தி; இராஜீவ் காந்தி |
சோலி சொராப்ஜி | 9 திசம்பர் 1989 – 2 திசம்பர் 1990 | வி. பி. சிங்; சந்திரசேகர் |
ஜி. இராமசாமி | 3 திசம்பர் 1990 – 23 நவம்பர் 1992 | சந்திரசேகர்; பி. வி. நரசிம்ம ராவ் |
மிலன் கே. பானர்ஜி | 21 நவம்பர் 1992 – 8 சூலை 1996 | பி. வி. நரசிம்ம ராவ் |
அசோக் தேசாய் | 9 சூலை 1996 – 6 ஏப்ரல் 1998 | தேவ கௌடா; ஐ. கே. குஜரால் |
சோலி சொராப்ஜி | 7 ஏப்ரல் 1998 – 4 சூன் 2004 | அடல் பிகாரி வாச்பாய் |
மிலன் கே. பானர்ஜி | 5 சூன் 2004 – 7 சூன் 2009 | மன்மோகன் சிங் |
கூலம் எசாஜி வாகனவதி | 8 சூன் 2009 – 11 சூன் 2014 | மன்மோகன் சிங் |
முகுல் ரோகத்ஜி | 19 சூன் 2014 – 18 சூன் 2017[4] | நரேந்திர மோதி |
கே. கே. வேணுகோபால் | 1 சூலை 2017 – (பதவியில்) | நரேந்திர மோதி |
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)