சுருக்கம் | ICC |
---|---|
உருவாக்கம் | 1925 |
நிறுவனர் | இந்தியத் தொழில்துறையின் முன்னணியாளர் கன்சியாம் தாசு பிர்லா |
நிறுவப்பட்ட இடம் | கொல்கத்தா |
நோக்கம் | தொழிற்கொள்கை ஆலோசனைகள் |
தலைமையகம் | கொல்கத்தா, இந்தியா |
தலைமையகம் | |
சேவை | இந்தியா |
உறுப்பினர்கள் | 2 |
ஆட்சி மொழி | ஆங்கிலம், இந்தி |
வலைத்தளம் | https://www.indianchamber.org/ |
இந்திய வர்த்தக சபை (Indian Chamber of Commerce) என்பது ஒர் அரசு சாரா வர்த்தக சங்கம் ஆகும். இதன் தலைமையகம் இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் அமைந்துள்ளது. இது நாட்டின் பழமையான வர்த்தக சங்கங்களில் ஒன்றான இது 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதன் தற்போதைய தலைவராக அமேயா பிரபு செயல்பட்டு வருகிறார். பொது இயக்குநராக ராஜீவ் சிங் உள்ளார்.
இச்சபையின் முக்கிய செயல்பாடுகளில் தகராறு தீர்வு மற்றும் கொள்கை ஆலோசனை ஆகியவை அடங்கும்.
இது ஆங்கிலேயர் ஆட்சியின் போது கொல்கத்தாவை தளமாகக் கொண்டு முன்னோடி இந்திய தொழிலதிபர்களால் நிறுவப்பட்டது. புது தில்லி, மும்பை, சென்னை, கவுகாத்தி, புவனேஷ்வர், பெங்களூரு, ஹைதராபாத், அகர்தலா, சிலிகுரி, ராஞ்சி மற்றும் பாட்னா ஆகிய இடங்களிலும் இச்சபைக்கு அலுவலகங்கள் உள்ளன.[1] 2023 இல் இச்சபை முதல் சர்வதேச அலுவலகத்தை இத்தாலியின் ரோமில் திறந்து அதன் தலைமைப் பிரதிநிதியாக வாஸ் ஷெனாயை நியமித்தது.[2] இச்சபை இந்திய சுதந்திர இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தொழில்துறை தலைவர்கள் பலர் இச்சபையை அதன் தலைவராக இருந்து வழிநடத்தியுள்ளனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் பின்வருமாறு:- [3] 1926– 27 நிறுவனர் தலைவர் – கன்ஷியாம் தாஸ் பிர்லா (1926–27) – டிபி கைதான் (1930), அம்ரித்லால் ஓஜா ( 1933–34), பிரிஜ் மோகன் பிர்லா (1936), அர்தேஷிர் தலால் (1938), ஜி.எல். மேத்தா (1939) சர் பத்ரிதாஸ் கோயங்கா (1941), ஆர்.எல். நோபானி (1942), சர் அப்துல் ஹலீம் கஸ்னவி (1945), கே.டி. ஜலான் (1946), கேபி கோயங்கா (1948), எஸ்பி ஜெயின் (1950) லட்சுமி நிவாஸ் பிர்லா (1951), சர் பிபி சிங் ராய் (1952), கரம்சந்த் தாப்பர் (1953), ஜிடி பினானி (1954), ஆர்எச் மோடி (1960), கேகே பிர்லா (1963), ஐஎம் தாபர் (1967) ஆர்பி கோயங்கா (1970), ஆர்எஸ் லோதா (1984) ஜேஎன் சப்ரு (1988) போன்ற சிலரை குறிப்பிடலாம்.[3]
இச்சபை தனது அமைப்பில் இரண்டு உறுப்பினர் தகுதிப்பிரிவுகளை வழங்குகிறது:[4]
உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களுக்கு இச்சபை முன்னுரிமையற்ற சான்றிதழ்களை வழங்கி வருகிறது. முழுவதுமாக பெறப்பட்ட ஏற்றுமதி பொருட்களை, உற்பத்தி செய்யப்பட்டவை அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை சான்றளிக்கப் பயன்படும் ஆவணம் இதுவாகும்.
இந்திய வர்த்தக சம்மேளனம் (ICC) வணிக தகராறுகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மாற்று தகராறு தீர்வு (Alternative Dispute Resolution-ADR) மூலம் சேவையை வழங்கி வருகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் நிதியளிப்பு மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் இணைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பான தேசிய மாநாடு மற்றும் வட்ட மேசைக் கூட்டங்களை இச்சபை 19 மற்றும் 20 செப்டம்பர் 2014 அன்று கொல்கத்தாவின் ஸ்வபூமி, ராங்மஞ்ச் என்னும் இடத்தில் ஏற்பாடு செய்தது. மாநாட்டின் நோக்கம் அனைத்து பங்குதாரர்களையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து இந்தத் துறையில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதற்கான இணைப்புகளை உருவாக்குவதாகும்.[7]
ஐசிசி பதிப்பகம் என்பது இந்திய வர்த்தக சம்மேளனத்தின் பதிப்பக வெளியீட்டுப் பிரிவாகும். இது மூன்று பரந்த வகைகளில் அத்தியாவசிய வள ஆதாரங்களை வழங்குகிறது அவையாவன
இந்தியாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கு ICC வர்த்தக வசதிப்பிரிவை அறிமுகப்படுத்தியது. ஐசிசியின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் விசாரணைகளை இப்பிரிவு பூர்த்தி செய்யும் மேலும் வணிக பொருத்தப்பாடுகளுக்கான ஒற்றை சாளரமாகவும் இது செயல்படும்.[8]
1966 ஆம் ஆண்டில், இச்சபை பெண்கள் கற்றல் குழு (LSG) என்ற அமைப்ப ஏற்படுத்தியது. இது பெண்களின் திறமைகளைத் திரட்டுவதற்கும், அவர்களின் சமூக மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளில் பங்கேற்க அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கியது.[9][10]
இந்திய வர்த்தக சபையின் அறக்கட்டளை அமைப்பான இந்த அறக்கட்டளை கொல்கத்தா நகர மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. மேலும் அந்த சூழலில் நகர்ப்புற வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தைக் கொண்டுவர பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிக்கிறது.[11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)