இந்திரா மக்கோத்தா (P082) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Indera Mahkota (P082) Federal Constituency in Pahang | |
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி (P082 Indera Mahkota) | |
மாவட்டம் | குவாந்தான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 120,549 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | இந்திரா மக்கோத்தா |
முக்கிய நகரங்கள் | குவாந்தான் |
பரப்பளவு | 392 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சைபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) |
மக்கள் தொகை | 248,946 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Indera Mahkota; ஆங்கிலம்: Indera Mahkota Federal Constituency; சீனம்: 英迪拉马哥打国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P082) ஆகும்.[6]
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா. 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா அரசாலும் ஆளப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனாவில் இருந்து சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் இந்திரா மக்கோத்தா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P082 | 2004–2008 | அட்னான் வான் மமாட் (Adnan Wan Mamat) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அசான் இசுமாயில் (Azan Ismail) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | பவுசி அப்துல் ரகுமான் (Fauzi Abdul Rahman) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சைபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சைபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) | பெரிக்காத்தான் நேசனல் | 41,692 | 44.65 | 44.65 | |
சுரைடி இசுமாயில் (Zuraidi Ismail) | பாக்காத்தான் அரப்பான் | 33,293 | 35.66 | 9.20 ▼ | |
குவெக் தாய் சியோங் (Quek Tai Seong) | பாரிசான் நேசனல் | 16,530 | 17.70 | 9.96 ▼ | |
முகமது நோர் சுந்தரி (Mohamad Nor Sundari) | தாயக இயக்கம் | 1,860 | 1.99 | 2.00 | |
மொத்தம் | 93,375 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 93,375 | 98.87 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,067 | 1.13 | |||
மொத்த வாக்குகள் | 94,442 | 100.00 | |||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)