இன்திசார் அமீர்

இன்திசார் அமீர்
انتصار عامر
முதல் சீமாட்டி எகிப்து
பதவியில் உள்ளார்
In role
8 சூன் 2014
குடியரசுத் தலைவர்அப்துல் பத்தா அல்-சிசி
முன்னையவர்நாக்லா மகமூது
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர்
In role
10 பிப்ரவரி 2019 – 10 பிப்ரவரி 2020
குடியரசுத் தலைவர்அப்துல் பத்தா அல்-சிசி
முன்னையவர்ஜெனெட் ககாமே
பின்னவர்ட்ஷெபோ மோட்செபே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 திசம்பர் 1956 (1956-12-03) (அகவை 67)
கெய்ரோ
துணைவர்
பிள்ளைகள்4, மகமூது அல்-சிசி
முன்னாள் கல்லூரிஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகம்

இன்திசார் அமீர் (அரபு மொழி: انتصار عامر‎  ; பிறப்பு 3 திசம்பர் 1956) எகிப்தின் தற்போதைய முதல் பெண்மணி ஆவார். இவரது கணவர் அப்துல் பத்தா அல்-சிசி 8 சூன் 2014 அன்று எகிப்தின் ஆறாவது ஜனாதிபதியானார்.[1]

கல்வி

[தொகு]

இன்திசார் அமீர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியினை 1977-ல் அல்-அபாசியா உயர்நிலைப் பள்ளியில் பெற்றார்.[1] ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர்.[1]

குடும்பம்

[தொகு]

அப்துல் பத்தா அல்-சிசி இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு 1977-ல் இன்திசார் அமீரை மணந்தார்.[1][2] இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மகமூது, முஸ்தபா, அசன் மற்றும் ஆயா ஆவர்.[3] சூன் 2013-ன் எகிப்திய எதிர்ப்புகளுக்குப் பிறகு, இந்திசார் அமீரின் கணவர் எகிப்தின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் இவர் எகிப்தின் முதல் சீமாட்டி ஆனார். இது 2013-ல் எகிப்திய தரைப்படை சதிப்புரட்சி மூலம் முகம்மது முர்சியை ஆட்சியிலிருந்து நீக்கியது. நீதிபதி அட்லி மன்சூர் சூலை 3, 2013 முதல் சூன் 7, 2014 வரையிலான இடைக்காலத்தின் போது செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டு

[தொகு]

முன்பு தரைப்படை ஒப்பந்ததாரராக இருந்த ஒரு எகிப்தியர், முகமது அலி, இன்திசார் அமர் தரைப்படை அதிகாரிகள் மற்றும் சிசியின் உறவினர்கள் "பரவலான ஊழலின்" ஒரு பகுதியாக இருந்தார் என்று குற்றம் சாட்டினார். அமர் மற்றும் இவரது கணவர் பற்றிய அலியின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெரு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.[4]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 AfricaNews (2019-06-01). "Celebrating African First Ladies: Senegal's Marieme Faye Sall". Africanews (in ஆங்கிலம்). Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2019-09-18.
  2. al-Hameed, Ashraf (12 May 2014). "Egypt's next first lady? Meet Mrs. Sisi and Mrs. Sabbahi". al-Arabiya. http://english.alarabiya.net/en/perspective/features/2014/05/12/Who-will-be-Egypt-s-next-first-lady-.html. 
  3. Egypt’s next First Daughter? Meet Aya al-Sisi
  4. Younes, Ali; Ramy, Allahoum (26 September 2019). "Egyptian protesters to press for President el-Sisi's ouster". Al Jazeera English இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190926171300/https://www.aljazeera.com/news/2019/09/egyptian-protesters-press-president-el-sisi-ouster-190926104532583.html.