இயன் பெக்

இயன் பெக்
இயன் பெக்
இயன் பெக்
பிறப்பு17 ஆகத்து 1947 (1947-08-17) (அகவை 77)
ஓவ், சசெக்சு, இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர், விளக்கவுரையாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்விஇளங்கலைப் பட்டம்
கல்வி நிலையம்பிரைட்டன் கலை கல்லூரி
வகைகுழந்தைகள் இலக்கியம், கனவுருப்புனைவு
துணைவர்எம்மா ஸ்டோன்
பிள்ளைகள்3

இயன் ஆர்க்கிபால்ட் பெக் (Ian Archibald Beck) (பிறப்பு ஆகஸ்ட் 17,1947) ஒரு ஆங்கில குழந்தைகள் ஓவியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது ஏராளமான குழந்தைகள் புத்தகங்களைத் தவிர, எல்டன் ஜானின் குட்பை யெல்லோ பிரிக் ரோட் ஆல்பத்தின் அட்டைப்பட விளக்கப்படத்திற்காகவும் இவர் அறியப்படுகிறார்இ. இவரது புத்தகங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் உலகம் முழுவதும் விற்கப்பட்டுள்ளன.[1] 1999 இல் பெக் மாஸ்டர் ஆஃப் தி ஆர்ட் வொர்க்கர்ஸ் கில்ட் ஆக இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

உள்ளூர் இடைநிலை மாடர்ன் பள்ளியில் பயின்ற இயன் பெக் பதினொன்றாம் வகுப்பிற்குப் பிந்தைய தேர்வில் தோல்வியடைந்த பின்னர் , கலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரால் பிரைட்டன் கலைக் கல்லூரியில் சேர ஊக்குவிக்கப்பட்டார், அங்கு இவர் ரேமண்ட் பிரிக்ஸ் மற்றும் ஜான் வெர்னான் லார்ட் ஆகியோரால் கற்பிக்கப்பட்டு விளக்கப்படம் மற்றும் வரைபட வடிவமைப்பு ஆகியவற்றைப் படித்தார்.[2] இவர் 1968 இல் பட்டம் பெற்றார்.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இந்தக் கால கட்டத்தில், பெக் இலண்டனுக்கு குடிபெயர்ந்தார், ஒரு சுயாதீன விளக்கமளிப்பவராக, பொம்மைகள் உருவாக்கத் துறையில் ஹாரோட்ஸில் பகுதிநேர வேலை செய்தார். இவர் படிப்படியாக ஒரு வாடிக்கையாளர் தொகுதியை உருவாக்கி, குட் ஹவுஸ் கீப்பிங், காஸ்மோபாலிட்டன் மற்றும் ஹோம்ஸ் அண்ட் கார்டன்ஸ் போன்ற நுகர்வோர் பத்திரிகைகளில் பணியாற்றினார். ரை கூடர் மற்றும் ரிச்சி ஹேவன்ஸ் போன்ற கலைஞர்களுக்காக பதிவுத் துறைக்கான விளம்பரங்களையும் அவர் செய்யத் தொடங்கினார். பின்னர் எல்டன் ஜானுக்காக குட்பை யெல்லோ பிரிக் ரோட் போன்ற ஆல்ப அட்டைகளை வடிவமைத்து விளக்கினார். 1980களின் முற்பகுதி வரை பதிவுத் துறையில் தொடர்ந்து பணியாற்றினார்.[3] சிப்பங்களில் அடைத்தல், வாழ்த்து அட்டைகள், நாட்காட்டிகள், உட்புற வடிவமைப்பு gலகைகள் உள்ளிட்ட பல பணிகளை கான்ரான் வடிவமைப்புக் குழுவிலிருந்து இவர் பெற்றுள்ளார். கேட்விக் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சுவரோவியங்களுக்கான பணிக்குழுவையும் அவர் வைத்திருந்தார்.[2]

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ரேடியோ டைம்ஸிற்காக இவர் வரைந்த சில வரைபடங்களைப் பார்த்தது, மேலும் குழந்தைகளுக்காக அவர்கள் வெளியிட விரும்பிய ஒரு இதழுக்கான செயல்திட்டத்தில் இவர் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினர்.[3] இவரது முதல் பட நூலான, ரவுண்ட் அண்ட் ரவுண்ட் தி கார்டன், 1982-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு, இதை மற்றவர்கள் பின்தொடர்ந்தனர், 1989 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் கதையான தி டெடி ராபரை முடித்தார். 1997 ஆம் ஆண்டில் இவரது புத்தகம், ஹோம் பிஃபோர் டார்க் சிறந்த பொம்மை விருதுகளில் தங்க விருதை வென்றது, 2000 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் விருதை வென்றார், இந்த முறை புத்தகத்தின் பெயர் அலோன் இன் தி வூட்ஸ். தி ஹேப்பி பீ படத்திற்காக இவர் மீண்டும் விருதை வென்றார். 1999 ஆம் ஆண்டில் மாஸ்டர் ஆஃப் தி ஆர்ட் வொர்க்கர்ஸ் கில்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் டபுள் கிரவுன் கிளப்பின் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.[4][5]

திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், மேலும் பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு தவறாமல் செல்வதன் மூலமும், தனது புத்தகங்களை உருவாக்குவது மற்றும் கதைகளைப் படிப்பது பற்றியும் பேசுவதன் மூலமும் குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. "Mr Beck's big adventure". The Times (London). 27 May 2006. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/books/children/article726375.ece. பார்த்த நாள்: 5 December 2007. 
  2. 2.0 2.1 "Biography of Ian Beck". Northern Children's Book Festival. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 5 December 2007.
  3. 3.0 3.1 3.2 "Biography of Ian Beck". Bloomsbury Publishing Plc. Archived from the original on 9 March 2012. பார்க்கப்பட்ட நாள் 5 December 2007.
  4. "Past Masters" (PDF). Art Workers' Guild. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  5. "Ian Archie Beck". Art Workers' Guild. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  6. Author Information